உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

2. இந்து சமய உண்மைகள்

இப்பரதமா கண்டத்தில் தொன்றுதொட்டு நடை பெற்று வருகின்ற சாருவாகம், பௌத்தம், சமயம், மாயா வாதம், வைணவம், சைவம் என்றற்றொடக்கத்துச் சமயங் களெல்லாம் இந்து சமயங்களென்று பெயர் பெறுகின்றன,

வை தம்மை ஒழிய வேறு 'இந்துசமயம்' எனத் தனியே வழங்குவது ஒன்று உண்டோ என ஆராய்ச்சி செய்வாருள் ஒரு சாரார் அத்தன்மையது ஒன்றில்லை என முடிவுரை யுரைக்கின் றார்கள், தாமரை, முல்லை, நீலம், சண்பகம் முதலியவற்றின் வேறாகப் பூ வென்பது ஒரு பொருள் இல்லாமை போலவும், குயில், மயில், புறா, அன்னம், கோழி முதலியவற்றின் வேறாகப் பறவை என்பதொன் றில்லாமை போலவும், மான், மரை, ஆ, ஆடு, எருமை, குதிரை முதலியவற்றின் வேறாக விலங்கென்பதொன் றில்லாமை போலவும் முற்குறிக்கப்பட்ட சாருவாகம் முதலிய சமயங்களை ஒழிய வேறு இந்து சமயம் எனப் படுவதொன் றில்லையென்பதே அவர் கருத்தாம். இனி

பொருந்துமோ

அவருரைக்கும் அவ்வுரை வென்று உண்மையான் ஆழ்ந்து ஆராயுமிடத்து அது பொருந்தா தென்பது புலனாகா நிற்கும். தாமரை, முல்லை முதலியவற்றின் வேறாகப் பூவென்பதொரு பொருளும், குயில் மயில் முதலியவற்றின் வேறாகப் பறவை என்பதொரு பொருளும், மான் மரை முதலியவற்றின் வேறாக விலங்கு என்பதொரு பொருளும் இல்லாமை உண்மையாயின் அவை தம்மைப் பூ, பறவை, விலங்கு என வேறு பொதுப் பெயரான் வழங்குதல் என்னை? தாமரை, முல்லை என்னுஞ் சிறப்புப் பெயரே அமைவதாகவும் அவற்றைத் தாமரைப்பூ, முல்லைப் பூ பூ எனப் பொதுப் பெயருஞ் சேர்த்துக் கூறுதல் என்னை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/69&oldid=1591039" இலிருந்து மீள்விக்கப்பட்டது