உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

45

தாமரை முதலான பொருள் உலகத்தில்லாமலே அழிந்து போயினும், பூவென்னும் பொருள் எல்லாரானும் இனிதறியக் கிடக்குமன்றே? அல்லது வேறுசில புதுப் பூக்கள் தோன்று மாயின் அவையும் பூவெனப் பெயர் பெறுதல் திண்ணமே யன்றோ? இதனாற் பொருள்களின் அருவநிலை, உருவ நிலை என்னும் இரண்டும் இனிது பெறப்படுவனவாம். தாமரை முல்லை முதலான சிறப்புப் பொருளெல்லாம் கட்புலனுக்கு விளங்கித் தோன்றும் உருவுடைப் பொருளா யிருக்கின்றன, பூ வென்னும் பொதுப் பொருளோ அங்ஙனங் கட்புலனுக்கு மக்கள் L மனவறிவாற் கருதி

விளங்குவதன்றாய் யுணரப்படுவதா யிருக்கின்றது. பல திறப்பட்ட பூக்களையும், பறவைகளையும், விலங்கினங்களையும் மனத்தால் தொகுத் துப் பார்த்து ஆயுமிடத்து அப்பூக்க ளெல்லா வற்றிற்கும் பொதுவான சில தன்மைகளும் அப் பறவைகளெல்லா வற்றிற்கும் பொதுவான சில தன்மைகளும் அவ்விலங்கினங்க எல்லாவற்றிற்கும் பொதுவான சில தன்மைகளும் இனித றியப் படுகின்றன வாகலின், அத்தன்மை களாற் றிரண்டை அருவப் பொதுப் பொருளே உருவுடைய அச்சிறப்புப் பொருளுக்கெல்லாம் நிலைக்களனா மென்பது தெளியப் படும், சுண்ணமும் மஞ்சளுங் கூடிய வழிச் செவ் வண்ணம் உண்டாதல் போலப் பூவென்னும் பொதுக் குணப்பொருளில் வேறு சில சேர்ந்து தாமரை முதலான சிறப்புப் பொருள்கள் தோன்றுகின்றன, சிறப்புப் பொருளை யெல்லாம் பகுத்தால் அவை தனித்தனிப் பொதுப் பொருளாய் நிலைபெறும்.

சிறப்புப் பொருளெல்லாம் அழிவெய்தும்; பொதுப் பொருள் அழிவெய்தமாட்டா, அன்னம்பட்டர் முதலான தருக்க நூலாரும் சாதிப் பொதுத்தன்மை என்றும் உளதா மென்பர். இக்காலத்தியற்கைப் பொருள் நூலாரும் பொருள் களைப் பகுத்துக் கலப்புச் சிறப்புப் பொருளெல்லாம் அழியுமென்றும், கலவாத தனிப்பொருளெல்லாம் என்றும் உளவா மென்றுங் கூறுவர். எனவே சாருவாகம், பௌத்தம் முதலியவற்றின் வேறாய் இவற்றிற்கெல்லாம் பொதுவான விரிந்த இலக்கண முடைத்தாய் விளங்கும் இந்துசமயம் என்பதொன்று தனியே உண்டென்பதூஉம், அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/70&oldid=1591040" இலிருந்து மீள்விக்கப்பட்டது