உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

❖ ❖ மறைமலையம் - 27

பொதுவான அதன் கோட்பாடுகள் சில மிகுந்துங் குறைந்தும் வேறு சில உடன் சேர்ந்தும் சாருவாகம் முதலிய மற்று அச்சமயங்ளெல்லாம் தோன்றி நடைபெறுகின்றன வென்பதூஉம் நன்கு பெறப்படும். ஆகையால், இந்து சமயம் பறப்படும்.ஆகையால், என்பது பண்டை பண்டைக் காலந்தொட்டு நடைபெறுகின்ற உண்மைச் சமயமேயல்லது பிறர் கூறுமாறுபோல் இல்லாத தொன் றன்று, இவ்விந்து சமயத்தின் பிரிவுகளான சாரு வாகம், பௌத்தம், சமணம், மாயாவாதம், வைணவம், சைவம் முதலிய சிறப்புச் சமயங்களெல்லாம் அழிந்தொழியினும், அன்றி வேறு சில சமயங்கள் புதிதே முளைப்பினும், இவற்றிற் கெல்லாம் பொதுவாக விரிந்து இவை தம்மை யெல்லாம் தன்கண் அடக்கிக் கொண்டிருக்கும் இயல்புடையதான இந்து சமயம் என்றும் உள்ளதாயே விளங்கும்.

இனி இப்பெற்றித்தாகிய இந்துசமயத்தின் கோட்பாடு கள் யாவையோவெனிற்; காணப்பட்ட இவ்வுலகினுக்குக் காணப் படாத முழுமுதற் கடவுள் முதலாய் உள்ள தென்பதும், அஃது அருவமாயும், உருவமாயும் இவை யல்லவாயும் இருக்கு மென்பதும், அஃது என்றும் உளதாய் அறிவாய் இன்பமாய் இருப்பதாகலிற் ‘சச்சிதா நந்தம்' எனப்படும் என்பதும், அஃது அருவமாய் வழுத்தப்படுதலே யன்றியும் எல்லார்க்கும் வணங்குதற்கு எளிதான உருவத் திருமேனியுடன் விக்கிரகத்தின் கண்ணும் வைத்து வழிபடப் படுமென்பதும், அதனை அறிந்து வழிபடுதற்குரிய உயிர்கள் அறிவுடன் என்றுமுள்ள பொருள்களாய் எண்ணிறந்தனவாய் இருக்குமென்பதும், இவ்வுயிர்கள் தொன்றுதொட்டே அறியாமை வயப்பட்டிருக்கின்றனவாகலின் இவைகள் அவ்விறைவனை வழிபடுமாற்றால் தூய்மை எய்தி அவனோடு ஒற்றுமைப்பட்டு இன்ப நுகரு மென்பதும், இவைகள் அறிவு முதிர முதிர ஒரு பிறப்பை விட்டு மற்றொரு பிறவியிற் செல்லுமென்பதும், இங்ஙனம் இவற்றிற்குரிய பிறவிகள் பலவாய் எண்ணிறந்தன வாகுமென்பதும்,

இவ்வுயிர்கள் முற்பிறவியில் செய்த வினை பிற்பிறவியில் வந்து அவைகளாய் நுகரப்படுமென்பதும், இவ்வுயிர்களுக்கு உடம்பாயும், கருவிகளாயும், இடங்களாயும், நுகர் பொருளாயு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/71&oldid=1591041" இலிருந்து மீள்விக்கப்பட்டது