உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

47

மிருந்து பயன்படுகின்ற அறிவில்லாத சடப் பொருள் என்றும் உளதாமென்பதும் இதற்கு உரிய கோட்பாடுகளாம் இக் கோட்பாடுகளனையவும் இவ்விந்திய நாடெங்கும் தழுவப் பட்டு வருகின்றன, இவ்விந்திய நாடு எங்கணுமுள்ள மக்கள் பெரும் பாலார் கடவுள் உண்டென்பதில் இயற்கை யிலேயே நம்பிக்கை யுடைய ராயிருக்கின்றனர், இதனை உருவத்திரு மேனியில் வைத்து வணங்கும் விக்கிரக வழிபாடும் இமய மலையுச்சி முதல் குமரிமுனை வரையிலும் பரந்து காணப்படு கின்றது, அவரவர் நுகரும் இன்ப துன்பங்களுக்கு அவரவரே உரியர் பிறர் உரிய ராகார் என்று நாடோறும் வழங்குஞ் சொற் களைக் கேட்டலால், உயிர்கள் பலர் என்னும் உணர்ச்சியும் இவ்விந்திய நாடெங்கும் பரவிக் கிடக்கின்றது, யான் துன்பப்படுதற்கு என்னுடைய அறியாமையே காரணம் என்று இங்குள்ளார் எல்லாரும் கூறுதலால், உயிர்களுக்கு அறியாமை இயற்கையே உள்ளதென்பதும் இவ்விந்தியா விற்கே உரிய உரிய கொள்கையாம் இப்பிறப்பில் யான் அறஞ் செய்தால் மறுமையில் நற்பிறவி யடைவேன், இப்பிறப்பில் யான் மறஞ்செய்தால் மறுமையில் தீப்பிறவியடைவேன் என்று பலருங் கூறுதலால் அடுத்தடுத்துப் பிறவிகள் மென்பதும் இங்குள்ளார்க்கு உடன்பாடா கின்றது, ஒருவன் துன்புறுங் காலத்து இஃது யான் முன் செய்த வினைப்பயன் என் று அடுத்தடுத்து வழங்கக் காண்ட லால் ரு வினை உண்டென்பதும் மற்றிவர்க்கு உடன்பாடாகின்றது, 'உள்ளது போகாது இல்லது வாராது' என்னும் பழமொழி நாடோறுங் கேட்கப்படுதலால் இவ்வுலகம் L மாயையிற் றோன்றிய தென்பதும், அம்மாயை அறிவில்லாதாய் என்றும் உள்ள உண்மைப் பொருளாமென்பதும் இந்தியர்க்குக் கருத்தா கின்றன, ‘யான் என் அறியாமை விலகிக் கடவுளின் அருளுக்குத் தகுதி யாவேனோ என்று ஆங்காங்குப் பலருங் கூறுதலால் ‘வீடுபேறு' என்பது அறியாமை நீங்கப் பெற்று முதல்வன் அருளோடு ஒற்றுமைப்படுதலேயா மென்பது இவர் கொள்கை யாகின்றது. நண்பர்காள்! இங்ஙனம் இக்கொள் கைகள் இவ்விந்திய நாடெங்கும் பரவி வழங்குதல் நம்மனுப வத்திற் காணப்படுதலால் இவை தாம் இந்து சமயம் எனப்படுதற்குப்

வரு

வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/72&oldid=1591042" இலிருந்து மீள்விக்கப்பட்டது