உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

❖ ❖ மறைமலையம் – 27

பொருந்துவனவா மென்பது தெற்றென விளங்கும்,

இனி இந்து சமயப் பிரிவான மேற்கூறிய சமயங்களி லெல்லாம் இக்கொள்கைகள் சில குறைந்தும் வேறு சில கூடியும் வேறு வேறு பெயர் பெற்று நிற்றலைக் காட்டுவாம், காணப்படுவதாய் அறிவில்லாத பருப்பொருளான இவ் வுலகம் உள் பொருளேயாம் என்னும் அதன் கொள்கையை மட்டும் வற்புறுத்திக் கடவுளும் உயிரும் இருவினையும் இல்லை என்று கூறுவதே சாருவாக மதமாம். இது

பூதமதி னொன்றுபிரி யப்புல னிறக்கு

நீதியினி னிற்பனந டப்பனவு முற்போல் ஓதும்வகை யாகியுறு காரியமு லந்தால் ஆகியவை யாமிதனை யறிவதறி வாமே

என்றும்,

இப்படியன்றிக் கன்ம முயிரிறை வேறுண் டென்று

செப்பிடு மவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித் தப்பிலா காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே

என்று அவர் கூறுமாற்றால் அறியப்படும். அறிவென்பது நான்கு பொருட் கூட்டத்தின் விளைவாய் உண்டாவ தென்னுஞ் சாருவாகர் போலாது சடப் பொருளின் வேறாக அறிவாகிய புத்தி ஒன்றுண்டென்று மட்டுங் கூறிக் கடவுளும் உயிருமில்லை யென்பதே பௌத்த மதமாம். இதில் அறிவும் அறிவில்லாத சடமும் வேறென்னும் இந்துசமயக் கொள்கை வலியுறுக்கப் படுதல் காண்க

இனிச் சடப்பொருளும் அதனின் வேறாகிய அறிவும் அவ்வறிவினையுடைய உயிரும், அவ்வுயிரோடியைந்து வரும் ருவினைகளும் உள்ளனவென்று மட்டும் வற்புறுத்திக் கடவுள் இல்லையெனக் கூறுவதே சமண மதமாம்.

இனி உலகமும் இருவினையும் உயிரும் வியவகாரத்தி லுள்ளன, பாரமார்த்திகத்திற் பரப்பிரமம் ஒன்றேயுள்ளது ஏனையவெல்லாம் பொய்ப் பொருளாம் எனக் கூறுவதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/73&oldid=1591043" இலிருந்து மீள்விக்கப்பட்டது