உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

இதன்கட் கடவுள்

மாயாவாதமாம். வற்புறுத்தப் படுகின்றது, இது

49

அருவமென்றே

இருளிற் பழுதை யரவெனவே யிசையு மிரவி யிருங்கதிர்க ளருளப் பழுதை மெய்யாகி யரவும் பொய்யா மதுபோல மருளிற் சகமுஞ் சத்தாகி மருவித் தோன்று மாசில்லாத் தெருளிற் சித்தே சத்தாகும் பித்தாஞ் செகத்தின் செயலெல்லாம்

என்றும்

அறிவா யகில காரணமா யனந்தா னந்த மாயருவாய்ச் செறிவா யெங்கு நித்தமாய்த் திகழ்ந்த சத்தாய்ச் சுத்தமதாய்க் குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதந் தனக்களவாய்ப் பிறியா தனுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான்

என்றும் அவர் கூறுதலால் அறியப்படும்.

இனி உலகமும் உயிரும் வியவகாரத்திற் போலப் பாரமார்த்திகத்திலும் உள் பொருள்களேயாம் என்றும், ஆனால், இவை வாசுதேவன் வடிவேயாய் விளங்கு மென்றும், அவ்வாசுதேவன் உருவமாகவே யிருப்பானல்லது அருவமாக இருப்பானல்லன் என்றுங் கூறுவதே வைணவ மாம். இது, மாயையா யுயிராய் மாயா காரியமாகி மன்னி மாயையாற் பந்தஞ்செய்து வாங்கிடு மவனா லன்றி

மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை மாயைபோம் போனான் மாயன் வைகுண்டம் வைப்ப னன்றே

என்றவர் கூறுமாற்றால் விளங்கும்.

இங்ஙனம் இம்மதங்களினெல்லாம் இந்து சமயக் கொள்கைகள் சில பல குறைந்தும் மிகுந்தும் வேறுபட்டும் நிற்றல் இனிதறியப்படும், இனி உலகம் உள்பொருளாதல் சாருவாகத்தானும், அறிவுஞ் சடமும் வேறு வேறாதல் பௌத்தத்தானும், உயிரும் இருவினையும் உளவாதல் சமணத் தானும், கடவுள் அருவநிலையினராய் நிற்றல் மாயாவாதத் தானும், கடவுள் உருவத்திரு மேனியு முடையராதல் வைணவத்தானும் பெறப்படுகின்றன வாகலின்

வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/74&oldid=1591044" இலிருந்து மீள்விக்கப்பட்டது