உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் 27

-

யனைத்தும் இந்துசமயப் பிரிவு களாதற்கு இயைந்தனவே யாம், மற்று இக்கொள்கைகளெல்லாம் தன்கண் முழுதும் அடங்கக் காண்டு விளங்கும் இந்து சமயந்தான் சிறிதாயினுஞ் சுருங்கும் இயல்பிற்றாதலின்றித் தன்கட் பிரிந்த சமயங்களுமாய் அவற்றின் வேறுமாய் மேற்பட்டுத் தோன்றல் பெரிதும் உற்று நோக்கற்பால தொன்றாம்; இது தன்னிற் பிரிவான மதங்களில் உள்ள குறைகளை யெல்லாம் நிரப்பித்தான் எல்லா நிறைவு முடைத்தாய்ப் பொலிகின்றது.

இனி இவ்விந்து சமய நிறை பொருளைச் சிறிது சிறிதே ஆராய்ந்து போய்ப் பின் அவ்விந்து சமயமாவதிதுவென்பது காட்டுவாம்.

அறிவு

சாருவாகர் மதம் பற்றி நிலன், நீர், தீ, வளி எனப்படும் பருப்பொருள் ஒன்று சேர்ந்தவழியே அறிவு தோன்றும் என்பதற்கு இவ்வுடம்பின்கண் உட்கருவி, புறக்கருவி என்னும் உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்த வழி அறிவு தோன்று தலும், அவை வேறு வேறு பிரிந்த வழி அஃது அழிதலுமே சான்றாகலிற் சித்து எனவுஞ் சடம் எனவும் பொருள்களைப் பகுத்தல் கூடாது சடமே சித்தாம் என்று கூறுது மெனின்; உறுப்புகளெல்லாம் ஒன்று கூடிய இவ்வுடம்பு பிணமாய்க் கிடந்தவழி அதன்கண் அவ்வறிவு நிகழக் காணாமையின் அது பொருந்தாது, அற்றன்று, பிணவுடம்பில் உறுப்பின் ஒருமை நோயாற் பிறழ்ந்து போதலின் அதன்கண் அவ்வறிவு நிகழாதாயிற்றெனின்; தாமே ஒன்று கூடி அறிவைத் தோற்று வித்த உறுப்புகள் பின் நோய்வாய்ப்பட்டு அவ்வறிவை யிழந்ததென்றல் யாங்ஙனம் பொருந்தும்? அதுவேயுமன்றி அறிவில்லாப் பொருள்களான அவை தாமே ஒன்று சேரு மாறு யாங்ஙனம்? காந்தம் இரும்பைத் தன் மாட்டு வலித்துக் கொள்ளுதல் போல நான்கு பூதங்களும் ஒன்றை யொன்று வலித்துக் கொண்டு ஒருங்கு கூடின வெனின்; காந்தம் இரும்பை வலித்துக் கொண்டால் பின் தானே அதனை வி மாட்டாது; அதுபோல நான்கு பூதங்களும் ஒன்றையொன்று பற்றிக் கொண்டால் பின் அவை தாமே பிரியமாட்டா;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/75&oldid=1591045" இலிருந்து மீள்விக்கப்பட்டது