உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

51

அங்ஙனம் பிரியாவாகவே அக்கூட்டுற விற்றோன்றும் அறிவும் அழியாதாய் என்றும் விளங்கிக் கொண்டிருத்தல் வேண்டும்.

L

மு

சிறிய காந்தக்கல்லால் வலித்துக் கொள்ளப்பட்ட இருப்பூசி பின் ஒரு பெரிய காந்தக் கல்லை எதிர்ப்படின் அதனால் இழுக்கப் பட்டு அச்சிறிய கல்லை விடுதல்போல, நாற்பூதக் கூட்டுறவும் வேறொன்றாற் கலைக்கப்பட்டு முற்றோன்றிய அறிவு அழியுமெனின்; அந்நான்கு பூதத் தினைத் தவிரப் பிறிதொன்று உண்டென்பது சாருவாகருக்கு உடம்பா டல்லாமையால் அந்நான்கு பூதக் கூட்டத் தினையுங் கலைக்க வல்லதான பிறிதொன் றுண்டென்றல் அவர்க்குப் பொருந்தாதாகும், அற்றன்று, அந்நான்கு பூதங்களுள் ஒன்று ஒரு காலத்து மிகவலியுடைத்தா யெழுந்து ஏனையவற்றின் கூட்டுறவை அழிக்குமென்று கோடுமாகலிற் பிறிதொன்று வேண்டே மெனின்; முன் அம்மூன்று பூதங்களோடும் ஒன்று சேருங் காலத்து மற்றை அந்நான்காம் பூதத்திற்கு அவ்வலிமை எங்கே போயிற்று? முன் வலி சுருங்கிய பொருளே பின் வலிமிகுதியு முடைத்தா மெனின்; அவ்வாறு முன் சுருங் குதற்கும் பின் அது பெருகு தற்குங் காரணம் என்னை; அஃது அதற்கு இயற்கையா மெனின்; அங்ஙனமுரைப்பின் ஒன்றே இயற்கையாக வேண்டு மல்லது தம்மில் மாறுபட்ட இரு தன்மைகள் ஒரு பொருட்கட் டோன்றுமெனல் சாருவாகர் மதத்திற்கே இழுக்காய் முடியும்; என்னை? இன்று ஒரு சிறிய ஊசியை மட்டும் இழுக்குங் காந்தக்கல் நாளை ஒரு பெரிய இரும்புத் தூணை இழுக்கு மெனல் வேண்டும்; இன்று பதினைந்து மணங்கு சுமக்கும் ஒரு கோல் நாளைப் பதினாயிரம் மணங்கு சுமக்குமெனக் கூறல் வேண்டும்; இன்று பத்தரை மாற்றுரை கண்ட ஒரு பொற்கட்டி நாளை இருபது மாற்றுரை காணுமெனக் கூறல் வேண்டும், அங்ஙனங் கூறிற் சாருவாகர் கூறும் இயற்கை மதம் முற்றும் போலியாய் முடியுமாதலின், கருவிகள் தாமே ஒன்றுகூடி அறிவைத் தோற்றுவிக்கு மென்றலும் பின்னொருகாற் பிரிந்து அதனை அழிக்கு மென்றலும் எவ்வாற்றானும் பொருந்தா. இனிச் சடத்தினியல்பையுஞ் சித்தினியல்பையும் சிறிது ஆராய்ந்து

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/76&oldid=1591046" இலிருந்து மீள்விக்கப்பட்டது