உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் - 27 8

பார்ப்பார்க்கும் அஃதொன்றினொன்று தோன்று மெனல் பொருந்தாமை நன்கு விளங்கும், சடப்பொருளெல்லாம் ஒன்றோடொன்று ஒட்டும், பின் தாமே பிரியமாட்டா, பிறிதொன்று இயக்கினால் இயங்குந்தாமே இயங்கமாட்டா, கருவேலம் பிசினுங் கருங்கற் பொடியும் ஒருங்கு ஒட்டும் பின் பிரியா, காந்தம் இருப்பூசியைத்தானே இழுத்துத் தன்னோ டொட்டுவிக்கும் பின் அதனை விடுதல் செய்யாது, பந்தை எறிந்தால் ஓடும் தானே ஓடமாட்டாது. மற்று அறிவுப் ாது.மற்று பொருள்களோ தாமேயும் இயங்கும் பிறிதொன்றனையும் இயக்கும், தாமேயும் அறியும் பிறிதொன்றனையும் அறிவிக்கும், சிற்றெறும்பு தானேயும் இயங்குகின்றது தானே இயங்காப் பனைவட்டுச் சிறு துண்டினையும் இழுத்துச் செல்கின்றது; புறாக்கள் தாமேயும் பறக்கின்றன தங்குஞ்சுகள் பறக்கும் படியும் கற்பிக்கின்றன. இவ்வாற்றால் அறிவில்லாச் சடத்தி னியல்பும் அறிவுடைய சித்தினியல்பும் தம்முள் முற்றும் மாறுபட்டுக் கிடத்தலால் அது நாற்பூதக் கூட்டுறவிற் றோன்று மென்றல் ஒருவாற்றானும் பொருந்தாது, ஆகவே அறிவுஞ் சடமும் சடமும் வேறு வேறென்னும் இந்து சமயக் கொள்கையே பொருந்தமுடத்தாதல் இனிது பெறப்பட்டது; ப்பெற்றி நன்குணர்ந்த அருணந்தி சிவாசாரியரும்,

அறிவு பூதம தென்னின் வேறு புறத்த றிந்தமை கண்டிலஞ் செறிவு தானுட லத்தெ னிற்சவ மான போதுட றேருமோ குறிகொ ளாதுடல் வாயு வானது கூடி டாமையி னென்னினீ பிறித ராதுயிர் நிற்க ஞானமு றக்க மென்பிற வாததே அறிவு டற்குண மென்னி லானைய தாதி யந்தமெ றும்பதா முறுமு டற்பெரி தான வற்றினு தித்தி டும்பெரி தாகவே சிறுவு டற்செறி ஞான முஞ்சிறி தாயிடும்பரி ணாமமும் பெறுமு டற்சிறி தாவ தென்பெரி தாவ தென்சில பேசிடே

என்று அவற்றின் வேறுபாடு நன்கு தெரித்தோதினார்.

உயிர்

இனிப் பௌத்தர் மதம்பற்றி இவ்வுடம்பும் இவ் வுடம்பின் வேறாய் எல்லாவற்றையும் அறிவதாகிய அறிவும் உண்டு எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/77&oldid=1591047" இலிருந்து மீள்விக்கப்பட்டது