உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

53

கொள்வதல்லது, இவ்வறிவின் வேறாகிய உயிர் ஒன்றுண் டெனக் கூறல் பொருந்தாதெனின்; அற்றன்று, அறிவென்பது ஐம்பொறிகட்கும் புலப்படுவதன்றாய்த் தனியனுபவ அளவாய் உள்ள தொன்றாம், யானிதனைக் கண்டறிந்தேன், அதனைக் கேட்டறிந்தேன், இதனைச் சுவைத் தறிந்தேன்,அதனை முகந்தறிந்தேன், அதனைத் தொட் டறிந்தேன், மற்றிதனை எண்ணி யறிந்தேன் என்ற வழி யெல்லாம் அறியப்பட்ட பொருளும் அதனை அறிந்த அறிவு நிகழ்ச்சியும் எவ்வகை யைபுடையன? பொருள் இயைபா? பண்பியைபா? பொருளியைபாயின் இந்நிலவுலகத்தில் நிற்கும் எனக்கும் இதற்கு மிகவுஞ் சேய்த்தாயுள்ள செக்கர் வானத் திற்கும் எங்கே தொடர்புளது? மற்றுப் பண்பியைபு என்று உரைப்பின் அது பொருந்தும், ஞாயிறு வான் வெளியில் ஓரிடத்திருப்ப அதன் ஒளி யாண்டும் விரிதலானும், ஒரு கற்றார் ஓரிடத்திருப்ப அவரது புகழ் யாண்டும் பரவுதலானும் பண்பையுடைய ய பொருள் ஓரிடத்தே யிருந்ததாயினும் அதன் பண்பு அவ் விடமட்டில் வரையறைப்படாது மேலும் மேலும் விரிந்து செல்லும் இயல்பினதாய்க் காணப்படுகின்றது, செக்கர்வான் விசும்பிற் பெருஞ் சேய்மைக்கண்ணே காணப் படுவதொன்றா யினும் அதன் பண்பான சிவப்பு நிறம் தன்னைச் சூழ விரிந்து நிறைந்திருக்கும் வெளியின் நுண்ணிய அணுக்களை அசைத்து அம்முறையே கண்ணின் மேற்பரப்பிற் சென்று, தாக்க, அங்கேநிறைந்து நிற்கும் அறிவானது அதனைப் பற்றுகின்றது, இனம் இனத்தையே பற்றும் என்னும் வழக்கால் பண்பு வடிவான சிவப்பு நிறத்தை யறிகின்ற அறிவும் பண்பு வடிவாகவே யிருக்க வேண்டுமென்பது துணியப்படும், ங்ஙனந் துணியப்படவே சிவப்பு நிறஞ் செக்கர் வானத்தை

டு வேறு தனித்து நில்லாமைபோலப் பண்பு வடிவான அறிவும் தான் றனித்து நில்லாதாய்ப் பிறிதொரு பொருளைப் பற்றியே நிற்கும், அப்பொருள் யாதோவெனின் அதுவே உயிர் என்று பெறப்படும் என்க.

இன்னும் இவ்வறிவு உயிர்க்கு ஒரு பண்பாமென்பது 'நான் அறிந்தேன்’ ‘என் அறிவு' என்னும் வழக்கில் நான் என்ப தொரு பொருளும், அதனோ டொற்றுமைப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/78&oldid=1591048" இலிருந்து மீள்விக்கப்பட்டது