உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

❖ - 27❖ மறைமலையம் – 27

அறிதற் பண்பும் பெறப்படுமாற்றால் இனிது துணியப்படும், ‘அறிவு' பண்பாத லன்றிப் பொருளாயின் அவ்வாறதனை வழங்கு வதற்கு வேறொரு வாற்றானும் ஒரு காரணம் பெறப் படுவ தில்லை என்க. ஆகவே, பௌத்தர் கூறுமாறு அறிவு ஒரு பண்பிப் பொருளாக மாட்டாதென்பதும், அதனை யுடைய உயிர் வேறு தனியே யுள தென்பதும்இனிது பெறப் படுகின்றன. “உருவாதி கந்தங்க ளைந்துங் கூடி

யொருவன்வே றொருவனிலை யென்றுரைக்கும் புத்தா, உருவாதி யைந்தினையு முணர்பவர்யா ரென்ன

வுணரும் விஞ் ஞானமென்றாய் ஞானமுணர்ந் தவரார் உருவாதி பொருள்காட்டித் தனைக்காட்டுஞ் சுடர்போ

லுணர்வுபிறி தினையுணர்த்தித் தனையுணர்த்து மென்னின் உருவாதி பொருளினையுஞ் சுடரினையுங் காணு

முலோசனம்போ லுணர்வுபொரு ளுணர்பவன்வே றுண்டே"

என்ற சிவஞானசித்தித் திருவாக்கும் இதனை வலியுறுத்தும்,

இனி ஏகான்மவாதிகள் மதம்பற்றி அறிவுடைய உயிர் ஒன்றே உடம்புகடோறும் வேறு வேறாய்க் காணப்படுகின்ற தன்றும், குடங்கடோறும் வேறு வேறாய்த் தோன்றும் திங்களின் வடிவு அக்குடங்கள் உடைந்த வழி யில்லையாய்த் திங்கள் ன்றுமே நிலை நிலைபெறுதல்போல இவ்வுடம்பு களெல்லாம் போயவிடத்து உயிர் ஒன்றாகவேயிருக்கு மென்றுங் கூறுவதே பொருந்து மென்னின்; அற்றன்று, திங்க ளினிடத்துக் காணப் படும் ஒளிவடிவும் வட்டவடிவும் அதன் நிழல்களெல்லா வற்றிலுங் காணப்படுதல்போல ஓருயிரி னிடத்துக் காணப்படும் அறிவுஞ் செயலும் ஏனை உயிர் களிடத்துங் காணப்படுதல் வேண்டும், அங்ஙனமன்றி அவை வ் வொருவரிடத்தொவ் வொருவாறாய்ப் பல திறப்பட்டு நிகழக் காண்டலால் உயிர் ஒன்றே யென்னுமுரை ஒரு சிறிதும் பொருந்தாது, அற்றன்று, நீரின் அசைவாற் றிங்களின் நிழலும் அசைவதுபோற் றோன்றினும் திங்களுக்கு அவ்வசைவு வராமை போல, உடம்பின் வினைகளால் உடம்பினுள்ளிருக்கும் உயிர்

துடக்குறுதல்போற் றோன்றி னும் ஒன்றே யாகிய அவ்வுயிர்க்கும் இயற்கையில் அவ் வினைத் துடக்கு ல்லையாமெனின்; ஈண்டு இவ்வுவமை பொருந்தாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/79&oldid=1591049" இலிருந்து மீள்விக்கப்பட்டது