உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

55

உயிரின் சேர்க்கையின்றி உடம்பு ஒரு வினை செய்ய அவ் னை உயிரின்கட் பற்றுவதாயினன்றே நீரினசைவையும் அது பற்றுங் திங்களின் நிழலையும் அவ்வா றுவமை கூறலாம்? உயிரின் சேர்க்கையில்லா வுடம்பு சிறிதாயினும் வினையின்றிக் கிடத்தல் பிணவுடம்பின்கண் வைத்து இனிதறி யப்படுதலால், உ ம்பினால் உயிர் துடக்கறு மென்றல் யாங்ஙனம் பொருந்தும்? இஃதுண்மையா னுணர்ந்த சைவ சித்தாந்த முதலாசிரியர்,

66

“அவ்வுடலி னின்றுயிர்ப்ப வைம்பொறிக டாங்கிடப்பச் செவ்விதி னவ்வுடலிற் சென்றடங்கி - அவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை மாறலுட னீயல்லை மற்று

'கண்டறியு மிவ்வுடலே காட்டொடுங்கக் காணாதே உண்டிவினை யின்றி யுயிர்த்தலாற் - கண்டறியு முள்ளம்வே றுண்டா யொடுங்கா துடனண்ணி லுள்ளதா முண்டிவினை யூண்'

என்றருளிச் செய்தார். நாலடியாரிலும்

“நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்த் தெடுக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டக் கால்

என்றிவ் வுண்மை தெருட்பட்டது காண்க. ஆகவே, உடம் பினைத் தொழிற்படுத்துவது உயிரேயல்லது உயிரினைத் தொழிற்படுத்துவது உடம்பன்றாம், அன்றாக, உயிர்கள் L பலவாயும், பல திறப்பட்ட வினை நுகர்ச்சிகளுடையவாயும் இருக்குமென்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோற் பெறப்படு வதாம், ஆதலால், அவர் கூறும் ஏகான்மவாதம் ஒரு சிறிதும் பொருந்தாது.

வினை

அற்றேலஃதாக, இனி உயிர்கட்கு வினை உண்டென் பது எவ்வாறு துணியப்படுமெனின்; தாய்வயிற்றிற் கருக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/80&oldid=1591050" இலிருந்து மீள்விக்கப்பட்டது