உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

❖ ❖ மறைமலையம் – 27

பிறக்கும் மகவு எவ்வகைக் குற்றமுடைய தன்றாகவும், ஒன்று தான்பிறந்த குடும்பத்தால் மிக வறுமைப் பட்டுப் பெருந்துன்ப மெய்துதலும், மற்றொன்று தான் பிறந்த குடும்பத்தால் மிக்க செல்வவளம் பொருந்தி இடை யறாதுஇன்பந்துய்த்தலும், ஒன்று நல்லறிவுடைய தாய்ப் பலராற் பாராட்டப்படுதலும், பிறிதொன்று தீயவறி வுடையதாய்ப் பலரால் இகழப்படு தலும், ஒன்று கலை யறிவு நிரம்பிப் பெரிய புலவோனெனப் பாராட்டப்படுதலும், ஏனையொன்று அஃதின்றிப் பெரும் பேதையென இகழப் படுதலும் என்னையென்று சிறிது ஆராய்ந்து பார்ப்பின் இவ்வகையான பல வேறுபாடுகளுக் கெல்லாம் இன்றியமை யாததான காரணம் ஒன்றிருத்தல் வேண்டுமென்பது போதரு மன்றே? அக்காரணந்தான் யாதோ வெனின், அஃதுயிர் களுக்குப் பண்டுதொட்டே அமைந்து கிடந்த வினையே யல்லது பிறிதில்லை யென்க. இவ்வுண்மை யுணர்ந்தே பெரியாரும்,

பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி யனுப வத்தா லேறிடு முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது தேறுநீ யினிச்செய் கன்ம மேலுடற் சேருமன்றே என்று அருளிச் செய்தனர்

னி

முற்பிறவி பிற்பிறவி

இனி இப்பிறவியில் நிகழும் நிகழ்ச்சிகொண்டே உயிர் கட்கு முற்பிறவியும் பிற்பிறவியு முண்டென்பது துணியப் படும். ன்று று இந்நூல் தோன்றுதலும் பயிலப்படுதலுமாகிய நிகழ்ச்சி யெல்லாம் இதற்கு முற்பட்ட நாளில் யாம் இதனை இயற்றிய செயல்களின் ய பயனாம் அல்லவோ? இன்று நடைபெறும்இதன் பயிற்சியெல்லாம் இனிவரும் நாட்களிற் சைவ சித்தாந்தம் மிகவுந் தழைத்தோங்கவும் அதனால் எல்லாரும் பேரறிவும் பேரின்பமு மெய்தவும் பயன்படும் அல்லவோ? இதற்கு முன்நாட்களில் தன்னுடம்பின் கூறு பாடறிந்து அதற்கியைய உண்ணவேண்டும் உணவின் வரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/81&oldid=1591051" இலிருந்து மீள்விக்கப்பட்டது