உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

சைவ சித்தாந்த ஞான போதம்

66

57

கடந்து வேறு பல புதிய உணாக்களைத் தான் வேண்டிய படியெல்லாம் உண்டான் ஒருவன் அப்போது அதன் பயன் அறியாது பின் பத்துநாட் கழித்து இன்று வயிற்று நோயால் வருந்தும்போது இது முன் வரம்பு கடந்துண்ட வுணவால் வந்ததென் றறியாது ஃது எனக்கு எங்ஙனம் வந்தது? எங்ஙனம் வந்தது?” என்றெண்ணி எண்ணித் துயர் உறுகின் றான். பின் மருத்துவனை வருவித்து மருந்து ஊட்டப் பெறுங்கால் அவ்வூட்டப் பெற்ற அந்நேரத்தே யாயினும் அன்றி அந்நாளே யாயினும் நலம் பிறவாவிடினும், அஃதுண்ட பின்னேரத்தேனும் பின்னாளே னும் நோய் தீர்ந்து நலமெய்தல் கண்டாமன்றே? இங்ஙனமே யாம் இப்பிறவியில் இன்பதுன்ப நுகருங்கால் இப்பயன் களைத் தந்த வினைகள் முற்பிறவியில் அமைந்து கிடந்தன வென்ப தனை மறந்தோ மாயினும்,அவை உளவாதல் ஒரு தலையே யாம்.இனி முற்பிறவியிற் செய்த தீவினைகளால் இப்பிறப்பில் எய்துந் துன்பங்களை அறிவொழுக்கத்தானும் அன்பொழுக் கத்தானுந் துடைத்துக் கொண்டால் இனிவரும் பிறவியில் ன்புறுதல் ஒருதலையாமன்றோ?

அற்றேலஃதாக, முற்பிறவியில் செய்தவினை இப்போ தொரு சிறிதாயினும் நினைவு கூரக் கூடவில்லையே யெனின்; நன்று சொன்னாய், 'நுங்கள் இல்லத்தில் நேற்றிரவு கறித்த கறியுங் குழம்பும் யாவை?, என்று உசாவினால் அவற்றை மறந்து விடைபகரத் தெரியாமல் விழிப்பார் நம்மனோரில் எத்தனை பேர் உளர்!' நேற்று நீங்கள் காலைமுதல் மாலை வரையிற் செய்தன வெல்லாம் சொல்லுக வென்றால் அவை சொல்லத் தெரியாது விழிப்பார் எத்தனைபேர் உளர்! அஃதிருக்க, முற்றும் நினைவு கூரக் கூடாவிடினும் முந்நாளிற் செய்த சிலவற்றை யேனும் பின்நாளில் நினைவு கூர்கின் றோமே யெனின்! நீவிர் குழவிப் பருவத்துச் செய்தன ஒரு சிலவேனும் இம்மனிதப் பருவத்துச் செய்தன ஒரு சிலவேனும் இம்மனிதப் பருவத்து நினைக்க மாட்டாமல் முழுதும் மறக்கின்றமையால் ‘யான் குழவியா யிருந்திலேன்' எனக் கூறல் அமையுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/82&oldid=1591052" இலிருந்து மீள்விக்கப்பட்டது