உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் - 27

காலம் நீள நீள மறதியும் நீளும்; காலத்தினாற் றோன்றும் மாறுதல்கள் கணக்கிறந்தன. இன்றைக்கிருந்த ஒரு பொருளின் நிலை நாளைக்கு அவ்வாறே காணப்படுவ தில்லை, நாளை இருப்பது மற்றை நாள் காணப்படுவதில்லை. ஆ! க காலத்தினாற் செய்யப்படும் புதுமைகள் என்னே! என்னே!ஒருவனைக் குழவிப் பருவத்தில் வைத்துப் பிடித்த படமும்,மனிதப் பருவத்தில் வைத்துப் பிடித்த படமும், முதுமைப் பருவத்திற் பிடித்த படமும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், அம்மூன்று உருவும் மூன்று வேறு மனிதவுருக் களாய்த் தோன்றுமே யல்லாது ஒன்றாய்த் தோன்றா, ஆ! ஒவ்வொரு நொடியும் மனத்தினுங் குறிப்பிடாத அத்தனை விரைவாய் எத்தனை எத்தனை மாறுதல்கள் நிகழ்கின்றன! இந்நிலவுருண்டையானது ஒரு நொடியிற் பதினெட்டரை மைல் விழுக்காடு ஒருமணி நேரத்தில் ஆயிரத்து நூற்றுப் பத்து மைல் இடம் சுழன்று செல்வதைப் பாருங்கள்! வ்வளவு விரைவாய்ச் சென்றும் இதன் யக்கமும்

மாறுதலும் நமக்குப் புலப்படுகின்றனவா? இல்லையே. இங்ஙனம் ஒவ்வொரு நொடியும் மனத்தினும் மிக்குச் செல்லும் அத்துணை விரைவுடன் நடைபெறும் மாறுதல் களின் இயல் புணர்ந்தே பௌத்தரிற் கணபங்க வாதிகளென ஒரு சாரார் தோன்றினர். சூறைக் காற்றினிடையிலகப் பட்ட இலவம் பஞ்சு போல், மிக விரைந்து நிகழும் இம் மாறுதல் களின் டைக்கிடந் துழலும் நம் உயிர்கள் அவற்றை முறை முறையேமறந்து விடுதல் இயற்கை யேயாம். இங்ஙனம் மறக்கப்படுவது பற்றி ஒரு பொருளினிருப்பு இல்லையென்று

க்கப்படுதல் சிறிதும் பொருந் தாதாகலின், இப்பிறப்பிற் கேதுவான முற்பிறவியும் அவற்றிற் செய்த வினைகளும் உண்டென்பது தேற்றமேயாம். இனி இப்பிறவியிற் செய்யப் படும் வினைகள் அளவிறந் தனவாகலின் இவற்றின் பயனைத் துய்த்தொழித் தற்கு மேலும் மேலும் பிறவிகள் இடையறாது தோன்று மென்க. வினைகள் உளவாங்காறும் உடம்பு ஒழியாது; இதுபற்றியே முற்றத் துறந்த பட்டினத்தடிகளும்,

வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்வினை தானொழிந்தால் தினைப்போ தளவுநில் லாதுகண் டாய்சிவன் பாதம்நினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/83&oldid=1591053" இலிருந்து மீள்விக்கப்பட்டது