உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

  • சைவ சித்தாந்த ஞான போதம்

நினைப்போரை மேவு நினையாரை நீங்கிந் நெறியினின்றா லுனைப்போ லொருவருண் டோமன மேயெனக் குற்றவரே

எனவும்,

66

“அன்னை யெத்தனை யெத்தனை யன்னையோ

வப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ பின்னை யெத்தனை யெத்தனை பெண்டிரோ

பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ முன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ மூடனாயடி யேனும றிந்திலேன்

இன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ வென்சேய் வேன்கச்சி யேகம்ப நாதனே"

என்று திருவாய்மலர்ந் தருளினார்கள்.

னி

59

இனி இவையெல்லாம் பொருந்துமாயினும், முற்பிறவி உண்டென்பதற்கு மட்டுங் காட்சியளவையின் வைத்துச் சில குறிப்புகள் காட்டல் வேண்டுமெனின்; அவையுஞ் சிறிது காட்டுவாம், தாய் வயிற்றை யகன்று பிறந்த மகவினை எடுத்துப் பாலூட்டப் புகுங்கால் உலகப் பழக்கஞ் சிறிது மறியா அம்மகவு வாய்கூட்டிக் கொங்கையை இழுத்துப் பால் உண்ணல் கண்டாமன்றோ? அஃதங்ஙனமுண்ண எவ்வாறு கற்றது? என்றாராயின் அது முற்பிறவியில் அங்ஙனம் வாய் கூட்டியுண்ட பழக்கத்தால் வந்ததேயாம் என்பது நன்கு புலப்படும். இது வொன்றோ, இன்னும் அம்மகவு மக்கள் முகத்தைப் பார்த்து நகையாடத் தெரியாப் பொழுதே உறங்குங் காலத்துப் பாலொழுகும் வாய்விரித்து நகைப்பதுங் கண்டாமன்றே? அஃது அங்ஙனம் யாரைக் கண்டு நகைக்கின்றது? கனவில் நகைக்கு மென்னின்; நாமெல்லாம் நனவிற் றோன்றியதைக் கனவிற் காண்கின்றோம்; நனவிற் காணப்படாதன கனவிற்றோன்று மாயின் அவை முற்பிறவி யின் றோற்றமா மன்றோ? நனவின் பழக்கம் சிறிது மில்லாத அம்மகவுக்கு நனவுங் கனவும் ஒன்றே யன்றோ! ஆனால், நனவில் வெளி யுலாவுகின்ற அதனறிவு கனவில் உள் உலவா நிற்ப, அவ்வாறுலவுங்கால் முற்பிறவியிற் கூடிய பழக்கங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/84&oldid=1591054" இலிருந்து மீள்விக்கப்பட்டது