உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

❖ *❖ மறைமலையம் - 27

சில அதற்கு நினைவிற் றோன்ற அங்ஙனம் நகையாடுகின்றது, ஆகலின், குழவிப் பருவத்துயிர்கள்மாட்டுக் காணப்படும் நிகழ்ச்சிகொண்டே முற்பிறவி யுண்டென்பது நாட்டப் படுதல்

காண்க.

கடவுள்

இனி இருவினையே தன்னைச் செய்தோன் அறிவிற் பதிந்து கிடந்து பின்னை அவன் தன்னை நுகர்ந்து ஒழித்தற் பொருட்டு உடம்பினைத் தோற்றுவிக்கும், இதற்கு வேறொரு கடவுள் வேண்டாமெனக் கூறும் சமணர்மதம் பற்றிக் கடவுள் ஒன்றில்லையெனக் கூறினால் வரும் இழுக்கென்னை யெனின்; னை என்பது தொழிலாகும். வினை தன்னைச் செய்தானை விட்டுப் பிரிந்திராத துண்மையேயாயினும், அவ்வினையே

வினை

வ் வுடம்பினைத் தோற்றுவிக்கு மெனல் பொருந்தாது; என்னை? அஃதோர் அறிவில்லாத நிகழ்ச்சி யாகலினென்க. அற்றன்று, வினைதானே உடம்பினைப் படைப்பதன்று, அது தன்னை யுடை ய உயிரின் துணை கொண்டு அதனைப் படைக்கு மெனின்; அறிவின்றி வினை வயப்பட்டுக் கிடக் கின்ற ஓருயிர் தானே தன் வினையை நுகர்ந் தொழித்தற் பொருட்டு ஓருடம்பைப் படைக்கு மென்றல் யாங்ஙனம்? அங்ஙனம் படைக்கவல்லதாயின் முன் எடுத்த வுடம்பையே விடாதிருக்க அமையுமன்றோ? இறப்புவருங் காலத்து அவ்வுடம்பை விட வேண்டுமேயென நினைந்து நினைந்து அஃது இரங்குதல் என்னை? இவ்வாறு வினை அறிவில தாகலிற் றானே ஓருடம்பைத் தோற்றுவியா தாகலானும், வினை செய்த உயிர் அறிவின்றி வலியிழந்து கிடத்தலால் அது தானும் அதனைப் படைத்துக் கொள்ள மாட்டாமை யானும்,இவையிரண்டின் வேறாக உடம்பைப் படைக்க வல்லது பிறிதொன்று வேண்டு மென்னும் ஒழிபளவை யாற் கடவுளே அதனைப் படைக்கு மென்பதும், அது தானும் இவ்வுலகுயிர்க்கு முதலாயுளதா மென்பதும் பெறப்படும்; இஃதுணர்ந்த பெரியாரும்,

66

அநாதியே லமைவின் றென்னின் மலமாயை கன்ம மணுச்சிவன் அநாதிகன் மமணுக்கள் செய்ய வறிந்து கன்ம முடற்செயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/85&oldid=1591055" இலிருந்து மீள்விக்கப்பட்டது