உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

அநாதிகா ரியமா முடற்க ளசேதனம் மணையா வறிந் தநாதியா தியமைக்க வேண்டு மமைப்பி னோடு மநாதியே" என்றருளிச் செய்தனர்.

இனி

61

மாயாவாதி மதம் பற்றிக் கடவுள் ஒன்றே ருவாயுளதென்றும், ஏனை யுருவுடை உலகம் முதலா யினவும் உயிரும் அதன்கட் பொய்யாத் தோன்றுகின்றன வன்றும், உண்மையான் உணர்ந்தவழிக் கடவுள் ஒன்று மட்டுமே பெறப்படுமென்றும் உரையாமோ வெனின்; தோன்றுவ தொருதோற்றம் மெய்யே யாயினும் பொய்யே யாயினும் தோன்றப் பெறுவதனால் அஃதோர் உருவ முடைத்தாதல் வேண்டுமன்றோ? கடவுள் அருவப் பொருளா மென முற்கூறிப் பின் அதன்கண் உருவுடைப் பொரு ளெல்லாம் பொய்யாய்த் தோன்றுமென்றன் முன்னொடு பின் மலைவாமன்றோ! காணப்படுகின்ற இவ்வுலகுயிர்களைக் காண்ே காணப் படாத கடவுளை ள யறியவேண்டி யிருத்தலிற் காணப்படுமிவற்றை யெல்லாம் வெறும் பொய்ப் பொருளென்றொழித்தாற்பின் காணப்படாத கடவுளை மட்டும் மெய்ப்பொருளென்று துணிந்து உரைத்ததற்கு வேறொருவாற்றானும் ஒரு காரணம் பெறப்படாமையானும், உலகத்துப் பொருள் அழியாது என்றும் உளதாம் என்னும் யற்கைப் பொருணூற் கொள்கையோடு அது முரணுத லானும்அங்ஙனங் கூறுதல் பொருந்தாதென்க.

இன்னும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் அருவமாக மட்டும் இருக்குமென்றொரு வரையறை கட்டிச் சொன்னால் அஃதுருவமாகின்ற ஆற்றலில்லாததென்று காள்ளப் படுமாக லானும், அருவமாகிய வளி உயிர் முதலிய வற்றோடொப்ப ஒன்றெனக் கொள்ளப்படுமல்லது வேறு தனியியல்பு உடை ய தாகா தாகலானும் அதுவும் பொருந்தாது. இவ்வுண்மை

உலகினிற் பதார்த்த மெல்லா முருவமோ டருவ மாகி

நிலவிடு மொன்றொன் றாகா நின்றவந் நிலையே போல அலகிலா வறிவன் றானு மருவமே யென்னி லாய்ந்து குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்தி டாயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/86&oldid=1591056" இலிருந்து மீள்விக்கப்பட்டது