உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

❖ ❖ மறைமலையம் – 27

என்னுந் திருமொழியால் இனிது விளங்கும்.

மக்கள் உயிரின்நிலை அறிவும் உணர்வும் என இரு ரு திறப்படும், அறிவைப் பார்க்கிலும் உணர்வே சிறந்ததாம், அறிவு உருவத்தைப் பற்றி நிகழும், உணர்வு அஃதின்றியும் நிகழும். உயிரின் அறிவாற் பற்றப்படாத அருவவியலுடைய முழுமுதற் கடவுள் அன்பு என்னும் உணர்வு நிலையாற் பற்றுதற் கெளியனாய் ஒரு உருவத்திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து அருள் புரிவனாகலின் இறைவற்கு அருவத் திருமேனி மட்டுமுண்டென்றல் இழுக்காம்.

“விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போன் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே'

என்ற தமிழ்மறையானும்

து,

“ஆத்மாந மரணிம் கருத்வா ப்ரணவஞ் சோத்தராரணிம் த்யாந நிர்மத நாப்யாஸாத் தேவம் பச்யேந்நி கூடவத் திலேஷு தைலம்ததி நீவ ஸர்பி ராபஸ்ரோதஸ்

ס.

ஸ்வரணீஷுசாக்நி”

என்னும் வடமொழி உபநிடத மறையானும் இனிது பெறப் படும்.

அற்றேற் கடவுள் உண்டென்று இங்ஙனம் ஆராயும் அறிவா லஃதறியப்டுவதில்லை யாயின், இவ்வாராய்ச்சி களெல்லாம் வெறும் போலியாய் முடியும்போலுமெனின்; அற்றன்று, அறிவால் ஆராய்வதெல்லாம் கடவுள் உண்டென்ப தனை உறுதிப்படுத்துதற்கே யன்றி அதன் உண்மை யுணர்தற் கன்று. அழகிற் சிறந்த மடந்தையின் உறுப்பிலக்கணங்களை அறிந்து மகிழ்வது அறிவு நிலையாய்ப் பின் அவளோடு ணங்கி இன்ப நுகர்ந்தறி வழிதல் உணர்வு நிலையாதல் போல இறைவனுண்டென்று மட்டும் ஆராய்ந்தறிதல் அறிவின் பயனென்றும், பின் அவனோடொருமித்துப் பேரின்பத் தழுந்தல் உணர்வின் பயனென்றுந் தேறப்படும். ஆகையால் அறிவுக்கு விளங்காத இறைவன் அன்பாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/87&oldid=1591057" இலிருந்து மீள்விக்கப்பட்டது