உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

4. விந்து

இவ்வுலகங்களுக்கும் இவ்வுலகங்களிலமைந்த உடம்பு கட்கும் முதற்காரணப் பொருளான மாயையென்பது மிக நுணுகிய தொன்றேயாயினும், அஃது அறிவில்லாத சடப் பொருளேயாம். அறிவில்லாச் சடப்பொருள்கள் எல்லாம் அறிவுடைய சித்துப்பொருள் இயக்கினாலன்றித் தாமாக யங்குதலும் பிறவற்றை இயக்குதலும் மாட்டதனவாம். இப்பெற்றிப்பட்ட மாயை தானே உலகங்களாகவும் உலகத்துப் பாருள்களாகவுந் திரிபுறுதல் ஏலாமையின், இதனைத் திரிபுறுத்துதற்கு எல்லா அறிவும் ஆற்றலுமுடைய முதல்வ னாருவன் இன்றியமையாது வேண்டப் படுவ னெனுமுண்மை மேலே பலகாலுமெடுத்து வற்புறுத்தப் பட்டது. இனி, இவ்விறைவனது தன்மை, அறிவில்லா மாயையின் நுண்ணிலைமையினும் சிற்றறிவுடைய உயிர் களது நுண்ணிலை மையினும் சால நுண்ணிதாய்ச் சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டா நொய்மைத்தாதலும் ஆங்காங்குக் காட்டப்பட்டது. இனி நுண்ணியவற்றுள் எல்லாம் நுண்ணியதான இறைமுதற் பொருளிலிருந்தே உலகத்தை இயக்குஞ் சக்தி தோன்றுமாறும், அச்சக்தியை நடு நின்று வாங்கி மாயையில் உய்த்தற்கு அச்சக்தியோ டொரு புடை யொத்த நொய்ம்மை வாய்ந்த மற்றுமொரு சூக்குமதத்துவம் வேண்டப்படுமாறும் சிறிது காட்டுதும். அறிவில்லாச் சடப் பொருள்கடம்முள்ளும் ஒன்றை அசைக் கும் ஆற்றல் அதனினும் நொய்யதான பிறிதொன்ற னிடத்தி ருந்தே வராநிற்கின்றது. மரமுங் காற்றும் இரண்டும் சடப் பொருள்களேயாயினும், மரம் பருப்பொருள், காற்றோ நுண்பொருள்; மரத்தின்கட் காணப்படும் அசைவு காற்றின் அலைவால் நிகழ்கின்றது. இனி உலகத்தின்கண் இடையறாது நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் மக்கள் அறிவு முயற்சியாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/142&oldid=1591472" இலிருந்து மீள்விக்கப்பட்டது