உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் - 28

றோன்றி நடைபெறுகின்றன. உலகத்துப் பொருள்களெல்லாம் சடப் பொருளேயாக, மக்களறிவோ பெரிதும் நுண்ணியதாய் அளக்கலாகா இயற்கைத்தாய் நிற்றல் காண்டுமன்றே? இச்சடப் பொருணிகழ்ச்சி முழுதும் இறப்ப நொய்ய மக்களறிவின் கட்டொன்றி நடைபெறுத லுங் காண்டுமன்றே? இங்ஙனமே எல்லாப் பொருள்களினுங் காணப்படும் அ அசைவுகளை யெல்லாம் பகுத்தாராயும் வழி அவை நுண்பொருட்கண் உள்ள ஆற்றலினால் உந்தப்பட்டே நிகழ்கின்றன வென்னும் உண்மை தெற்றென விளங்கா நிற்கும். விளங்கவே, எல்லா உலகத்தின்கட் காணப்படும் எல்லா நிகழ்ச்சிகளையுந் தோற்றுவிக்கும் ஆற்றல் அவை யெல்லா வற்றினும் நனி நொய்ய இறைவனிலிருந்தே போதரு மென்பதூஉந் தானே பெறப்படுமென்க.

னி

இனி இவ்விறைவன்பாலிருந்து போதரும் ஆற்றலை வாங்கி மாயையில் உய்த்தற்கு இடையே ஒரு தத்துவங் கருவியா வேண்டப்படுமாறு ஆராயற்பாற்று. இறை முதற்பொருள் அளவிடற்கரிய பேராற்றல் வாய்ந்ததாகலின் அதன்பாலிருந்து போதரும் அவ்வாற்றலை நேரே வாங்கிப்பெற்று நிற்றற்குரிய தன்மை மாயையின்கட் சிறிதுமில்லையாம். இவ்வியற்கை சடப்பொருள்கடம் முள்ளுங் காணப்படும். யாங்ஙனமெனின், கடுஞ்சூறைக் காற்று மிகவிரைவோடு வீசுங்கால், அதனெதிர் மரங்களும் மலைகளுங்கூட முனைத்து நிற்கமாட்டாமல் நிலை பெயர்ந்து வீழ்ந்தழிதல் கண்கூடாய் அறியப்பட்ட தொன்றன் றோ? தீயானது தன்னிலையில் மிக்கெழுந் தெரியுங்கால் எத்தகைப் பருப்பொருளும் அதனெதிர் நிற்கமாட்டாது படுசாம்பராய் வெந்தமிழில் காணப்பட்ட தொன்றன்றோ? தீயினும் பருப்பொருளேயாயினும் நிலத்தினும் நுண் பொரு ளான நீர் பெருக்கின் முன் ஏனைப்பொருள்க ளெல்லாம் தந்நிலை குலைந்து வேறாதல் பலகாலுங் காண்டு மன்றோ? ஆனதுபற்றியே, காற்றின் ஆற்றலையும் தீயின் வெம்மை யையும் நீரின் ஓட்டத்தையும் பயன்படுத்துக் கொள்ள விழை குவார் அவற்றின் சக்தியை இடையே ஏற்றற்கிசைந்த பொருள்களின் வாயிலாற் பெற்று அதனைப்பயன்படுத்து வாராயினா ரென்க. சடப்பொருள்களில் நுண்ணிய வாயிருப்பன வற்றின் ஆற்றலை ஏனைப் பருப்பொருள்கள் நேரே ஏற்க மாட்டாவாய் அழிந்து படுமாயின், மிக நுண்ணிய சித்துப் பொருள்கட் கெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/143&oldid=1591473" இலிருந்து மீள்விக்கப்பட்டது