உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

119

மேம்பட்டு ஆற்றவும் நொய்யதாய் விளங்கும் முழுமுதற் கடவுளிடத்தி ருந்து உண்டாம் வரம்பற்ற பேராற்றலை அறிவில்லாச் சடப்பொருளான மாயை எங்ஙனம் ஏற்றுத் தாங்க வல்லும்! பெரு நெருப்பைச் சேர்ந்த பருப் பொருள்களெல்லாம் அதனால் எரிக்கப்பட்டு நுண் பொருள் களாய் மாறுதல் போல, அளவற்ற அறிவுப் பெருந்தீயாய் விளங்கும் முதல் வனைச் சார்ந்த L மாயையும் அவனாற் பின்னும் நுண்ணி தாய்த்திரிபுறுத்தப் படுமே யல்லாமல், அஃது இறுகி வரவரப் பருப்பொருளாய் இறங்கி உலகங்களையும் உடம்பு களையும் உலகத்துப் பல் பொருள்களையுந் தோற்றுவிக்க மாட்டா தாகும். உலகங்களும் பிறவுந் தோன்றாவாய் ஒழியவே உயிர்களும் அவற்றின்கட் பட்டு அறிவு விளக்கமுறுதலும் இல்லையாய்ப் போம். ஆகவே, எல்லா இரக்கமும் சான்ற தனித்தலைமைப் பெருங்கடவுளான சிவம் தன் ஆற்றலைப் பருப்பொருள் மாயையானது ஏற்று உலகங்களைப் பிறப்பிக்க வல்ல தல்லாமைகண்டு, நுண்ணிலைமையில் ஒருபுடை தன்னை யொத்தும் பருப்பொருணிலைமையில் ஒரு புடை மாயையை ஒத்தும் நின்ற விந்துவைத் தன தாற்றலை ஏற்றுய்த்தற்கியைந்து இடைநிற்குங் கருவியாகப் பற்றி, அதன் வாயிலால் மாயை யினின்று உலகங்களையும் பிறவற்றையும் தோற்றுவிக்கலாயிற் றென்றுணர்க. இறைவன தாற்றலை நேரே பெறுதற் கேலாத மாயை அதனை விந்து வென்னுந் தன்னினும் மேற்பட்ட நுண்பொருள் வழியாற் பெற்றுத் தொழிற் படுமாற்றை, இந்நிலவுலகத்துப் பொருள் களுள்ளும் வைத்து விளக்கிக் காட்டுவாம்.

இந்நிலவுலக

L

மெல்லாம் பண்டொரு காலத்துப் பனிப்பாறையால் முழுதும் மூடப்பட்டுப் புற்பூண்டுகளும் ஏனையுயிர்களும் உயிர்வாழ்தற்கு ஏற்றதன்றாய் இருந்தது. பின்னர்ச் சிலகாலங் கழித்து இந்நிலத்தின் நடுவேயிருந்த பனிப்பாறை முற்றும் ஞாயிற்றின் வெம்மையாற் கரைந்து நீராய்ப்போக நிலம்புலனாகிப் புற்பூண்டுகளும் ஏனை யுயிர்களும் தன்கட் டோன்றி உயிர்வாழ்தற்கு இடனாயிருந்து பயன்பட்டு வருகின்றது. இவ்வியற்கை நிகழ்ச்சியின் உண்மையை உற்றராயுங் கால் தீயின் வெம்மையே உயிர்கள் உடம்புகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/144&oldid=1591474" இலிருந்து மீள்விக்கப்பட்டது