உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் - 28

உலாய் வாழ்தற்கு இன்றியமையாக் கருவியாதல் புலனாகின்ற தன்றோ? இத்துணை இன்றியமையா நெறிப்பாடுடைய தேனும் தீயின் வெம்மையை நேரே பெற்று உயிர்கள் யாக்கையில் நிலை பெறல் இயலுமோ? இயலாவன்றே. இம்மாட்டாமையால், தீயின் வம்மையானது இந்நில மண்டிலத்திற்கு நெடுஞ்சேய்மைக் கண்ணே உலவும் ஞாயிற்று மண்டிலத்திற் புலனாய்த் தோன்றி வரவரத் தனது ஆற்றாக் கடுமை தணிந்து இதனை வந்து தொடுங்கால் உயிர்கள் தாங்குதற்கியைந்த அளவினதாகிப் பனிப்பாறையை உருக்கி நீராக்கி, அந்நீரின் வாயிலாக எல்லா உயிர்களையும் தத்தம் உடம்புகளில் நிலைபெறச் செய்து வராநிற்கின்றது. தண்ணீர் நம்மனோர் ஊற்றுணர்வுக்குத் தட்பம் உடையது போற் றோன்றினும், உண்மையில் அது தான் நீராய் நிற்றற் கியைந்த அளவு வெம்மையைத் தன்கட் பொதிந்து வைத்திருக்கின்றது.நீரின்கண் ங்ஙனம் வெப்பம் உண்மை யாங்ஙனம் அறியப்படுமெனின்; இஞ்ஞான்றை இயற்கைப் பொரு ணூலார்' தாம் அரிதிற் செய்தமைத்த சூடறி கருவியைக் கொண்டு நீரின்கணுள்ளள வெம்மை எளிதில் அறியப்படுவ தேயாம்; அச்சூடறி கருவியை ஒரு பனிக்கட்டி மேல் வைத்தால் அக்கருவியின் கீழ்நின்ற இரசம் மேல் எழாது இருந்த நிலையிலி ருத்தலும், அதனைத் தண்ணீரினுட் சிறிது அமிழ்த்தினால் அவ்விரசம் தன்னிலை விட்டு மேலெழுந்து எண்பத்திரண்டு கீற்றுகள் வரையில் ஏறி நிற்றலும் காணுங் கால் பனிக்கட்டியில் இல்லாத சூடு தண்ணீரில் அமைந்து நிற்றல் நன்கு புலனாம். இவ்வாராய்ச்சி கொண்டு தீயின் வப்பமானது தான் உயிர்கட்குப் பயன்படுமுகத்தால் தன் கடுமை மிகக்குறைந்து தண்ணீரில் ஒருபடித்தாய் நிற்றல் ஐயமின்றி அறிந்து கொள்ளப்படும்.இனித் தீயோ மிக நுண்ணியதாயும் அத் தீயினாற் பயன்பெறும் உயிர்களின் உடம்புகளோ பருப் பொருள்களாயும் இருத்தலால், அத் தீயின் ஆற்றலான வெப்பம் அவைகட்கு நேரே பயன் படுவதன்றாக, ஒருவாற்றாற் றீயின் நொய்ம்மையோ டொத்தும் பிறிதொரு வாற்றால் உடல்களின் பருமையோ டொத்தும் நிற்பதான நீரின் வாயிலால் அஃது உயிர்கட்குப் பயன்படுவதாகின்றது. இங்ஙனமே இறை முதற் பொருளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/145&oldid=1591475" இலிருந்து மீள்விக்கப்பட்டது