உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

அளவுக்கடங்கா

121

அறிவொளி வெம்மையானது தனது நொய்ம்மைக்கும் மாயையின் பருமைக்கும் இடை நிகர்த்த தாய் நின்ற விந்துவைப் பற்றிக்கொண்டு அதன் வழியே மாயையை இயக்கா நிற்கின்றதென ஓர்ந்துணர்க. இவ்வாறு முதல்வற்கும் மாயைக்கும் நடுநின்று உதவுவதாகிய நொய்ய பொருளே விந்து' என்று சைவசித்தாந்த நூல்களில் வழங்கப்படுவ தாயிற்றென் றுணர்ந்து கொள்க.

அற்றேல், முதல்வற்கும் மாயைக்கும் இடையே இங்ஙன மொரு பொருள் உண்டென்பது எற்றாற் பெறுதுமெனின்; கருமுகிற் குழாங்கள் ஒருங்குகூடி வானின்கட்டோன்றுங்கால் அவற்றிடையே இடித்து மின்னொளிதுளங்கல் கண்டாமன்றே? இம்மின்னொளி3 யானது நிலன் நீர் தீ வளி வான் என்னும் ஐம்பூதங்களுள் ஒன்றன்றாதல் இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூலார்க் கெல்லாம் ஒப்ப முடிந்தது. இஃது இவ்வைம் பூதங்களுள் ஒன்றன்றாகவே இவற்றிற்கு முதலான மாயையில் உண்டானதும் இஃதன்று என்பது பெற்றாம்; என்னை? மாயையின் காரியங்களுள் ஒன்றாகாதது அவற்றின் காரணத்திற் சேர்ந்ததாதல் செல்லாமையான் என்க. தீயினொளியே மின்னொளியாமென் றுரைத்தால் வரும் இழுக்கென்னை யெனின்; தீயினொளி தீயெரியுங்காற் பிறப்பதாம்; மற்றுத் தீயோ உயிர்வளி÷ யினுதவியின்றி எரியமாட்டாதாம்; மின் னொளியோ உயிர்வளியினுதவியைச் சிறிதும் அவாவாது விளங்கக் காண்டலின் அது தீயொளியின் வேறாதல் நன்கு துணியப்படும். அற்றன்று, மின்னொளி வானின்கண் மிளிரக் காண்ட லின் அது வானென்னுங் காரணத்திற் றோன்றுங் காரியமேயெனின்; அதுவும் அமையாது, என்னை? ஓசையும் ஒளியும் உலவுதற்கு இடந்தந்து நிற்கும் வெறும் வெளியே வானாவதன்றி, அது மின்னொளிக்கு முதற்பொருளா மென்றல் எவ்வாற்றானும் பெறப்படாமையின் என்பது. அற்றாயினும், ஐம்பூதங்களினும் முறை முறையே நுணுகி மேற்செல்லும் தன்மாத்திரை அகங்காரம் புத்தி குணம் கலை முதலாக மேலெடுத்து விதிக்கப்பட்ட மாயாதத்துவங்களுள் ஒன்றாக அம்மின்னொளியினைக் கொள்ளாமோ வெனிற், கொள் ளாமன்றே, என்னை? அத்தத்துவங்களெல்லாம் வெவ்வேறியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/146&oldid=1591476" இலிருந்து மீள்விக்கப்பட்டது