உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் 28

பினவாதல் மேலே காட்டப்பட்டமையானும், அவ்வியல்பு களுள் மின்னொளியின் றன்மை ஒன்றாதல் காணப்படாமை யானும், அச் சூக்கும தத்துவங்களெல்லாம் நம்மனோருடம்பு களில் உயிர்க் கருவியாயிருந்து பயன்படும் அம்மாத்திரையே யல்லாமல் உடம்பின் புறத்தே நின்று வேறு தொழிற்பாடுடைய தாதல் எவ்வாற்றானும் பெறப்படாமை யானும், மின்னொளி யானது அவைபோலன்றி அகத்தும் புறத்தும் ஓவாதியங்கி எல்லாத் தத்துவங்களையுந் தொழிற் படுத்துமாறு இஞ்ஞான்று இயற்கைப் பொருணூலார் ச சய்யும் அரிய பரிய ஆராய்ச்சிகள் பலவற்றானும் தெளியப்படு தலானும் என்பது.

அல்லதூஉம், மாயையும் மாயையின் காரியப்பொருள் களான அச்சூக்கும தத்துவங்களுங் காரண காரியங்களாய்த் திரிவுபட்டு வருவனவாம். இங்ஙனந் திரிபு படுத்தப்படும் ஒரு பொருள் தானே மற்றொன்றனைத் திரிபுபடுத்தமாட்டாது; அதனை அங்ஙனஞ் செய்தற்குத் தன்னின் வேறான பிறிதொரு பொருள் இன்றியமையாது வேண்டப்படும். பிறிதொன்றனைத் திரிபுபடுத்தும் ஒருபொருள் தானே ஏனையொன்றாகத் திரிவுபடவும் மாட்டாது. பொற்கட்டி பலவகைப் பணி களாகத் திரிபுபடுத்தப்படுவதல்லாமல் தான் பிறிதொரு பொற் கட்டியினைத் திரிவுசெய்யமாட்டாது. அப்பொற் கட்டியினைத் திரிவுசெய்தற்கு அதனின் வேறான பொன் வினைஞன் ஒருவன் வேண்டப்படும். மற்று அதனைத் திரிவுபடுத்தும் பொன் வினைஞனோ தான் அவ்வணிகலன் களாக மாறுதலும் எஞ்ஞான்றுமில்லையாம். இம்முறையால் நோக்கும்வழிக், கலை வித்தை அராகம் முதலிய சூக்கும தத்துவங்களாகக் காரியப் படும் மாயையும், குணம் புத்தி அகங்காரங்களாக மாறும் கலையும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றங்களாக மாறும் அகங்காரமும் வான் வான் வளி தீ நீர் நிலங்களாக மாறும் தன்மாத்திரைகளும் தாம் பிறிதொன்றனைக் காரியப்படுத்த வல்லன அல்லவாம்; தம்மைக் காரியப் படுத்துதற்குத் தம்மின் வேறான பிறிதொன்றன் உதவியை அவாவி நிற்பனவாம். மற்று மின்னொளியோ தான் மற்றொன்றாய்க் காரியப்படாததோடு, ஏனை யெல்லாவற்றையுங் காரியப் படுத்து நிற்கும் இயல் பிற்றாய் நடை பெறா நிற்கின்றது. இதனானும், இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/147&oldid=1591477" இலிருந்து மீள்விக்கப்பட்டது