உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

123

மாயையிலும் மாயா தத்துவங் களிலுஞ் சேர்ந்ததாகாமல் அவற்றின் வேறாவதா மென்பது ஐயமின்றித் துணியப்படு மென்க. இங்ஙனந் துணியப் படவே, முதல்வற்கும், மாயைக்கும் இடைநிற்பதொரு நுண் பொருள் உளதென்ப தூஉம், அதுவே மின் னென்றும் விந்து வென்றும் பண்டை யறிவு நூல்களில் வழங்கப்படுவதாயிற் றென்ப தூஉம் பெறப்படும்.

D

அற்றேல், தான் காரியப்படாது நின்றே மாயையைத் தான் காரியப்படுத்த வல்லது விந்துவாயின் அஃதொன்றுமே உலகத்தை முத்தொழிற்படுத்த வமையும், இதனின் வேறாக இவற்றைச் செய்தற்கு வேறுமோர் இறைவன் வேண்டப்படுவ தெற்றுக்கெனின்; விந்து தன்கீழ் நின்ற எல்லாப் பொருள் களையும் இயக்க வல்லதொரு நனி நுண்ணிய தத்துவமே யாயினும், அது தானும் அறிவில்லாச் சடப்பொரு பாருளே யாகலின், உயிர்கட்கு உயிர்கட்கு வேண்டுமா றெல்லாம் அறிந்து அவற்றிற்கேற்ப மாயையைத் திரிக்க மாட்டாதாம். அதனான் அது தன்னையுந் தான் வேண்டுமா றெல்லாம் அறிந்து அவற்றிற்கேற்ப மாயையைத் திரிக்க மாட்டாதாம். அதனான் அது தன்னையுந் தான் வேண்டுமா றெல்லாம் நடத்தி உயிர்கட்குப் பயன்படுமாறு பலவேறுலகங்களையும் பலவேறுடம்புகளையும் மாயையிற் றோற்றுவித்தளித்துத் துடைக்கும் எல்லாவறிவும் எல்லா முதன்மையும் உடைய முழுமுதற் கடவுள் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படு மென்க. எதுபோலவெனின், நீராவிப் பொறி யின்கண் நுண் பொருளான நீராவியானது அப்பொறியின் உருள்களை ஓவாது நன்கு இயக்குமேனும், இயக்குந்தோறுங் குறையும் நீராவியினை இடையிடையே நிறைவு செய்தற்கும், அது தன்னளவின்மிக்கு அப்பொறியினை உடைத்தெறியாமல் அதனை அளவறுத்து விடுதற்கும், அதனான் இயக்கப்படும் அப்பொறியைப் பிறர்க்குப் பயன்படும் வகையானெல்லாம் நடைபெறுவித்தற்கும் அதனை ஓட்டு வானொருவன் இன்றியமையாது வேண்டப்படுதல்போல வென்க.

இனி, இவ்விந்துதத்துவம் மாயையைக் காரியப்படுத்து கின்றுழியும், காரியப்படுத்திய உலகங்களையும் பிறவற்றையும் இயக்குகின்றுழியும் பாம்பு மண்டலித்தாற் போலச் சுழன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/148&oldid=1591478" இலிருந்து மீள்விக்கப்பட்டது