உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறைமலையம் - 28

சுழன்று இயங்குமென அறிவு நூல்கள்

கூறாநிற்கும். இவ்வுண்மை இற்றை ஞான்று வானூலாராய்ச்சி சிறிதுை யார்க்கும் நன்கு விளங்கற்பாலதேயாம். ஞாயிற்று மண்டிலத் தினை நடுவண் நிறீஇ, நாமுறையும் இந் நிலமண்டிலத்தினையும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது முதலான மண்டிலங்களையும் அதனைச் சூழந்தோடுமாறு வைத்து இடையறாது சுழற்றிவரும் மின்னெனப்படும் விந்து வினியக்கம் சுழன்ற வியல்பிற்றாதல் தெளியப்படுகின்றதன்றோ? கார்த்திகைத் திங்களில் மாவலி சுற்றுஞ் சிறான் தான் சுற்றுவதோடு தன் கைகையும் தன் கையிற் கயிற்றாற் பற்றிய பனந்தூட் பையினையும் சுழற்றுவதுபோல, விந்து தத்துவமுந் தான் சுழன்று இயங்கி ஏனையுலகங்களையுஞ் சுழற்றி இயக்கா நிற்கின்றது. இவ்வாறு விந்துவாற் சுழற்றப்பட்டு இயங்கு தலாற்றான் எல்லா மண்டிலங்களும் சுழலுதற்கு ஏற்றவாம்படி பந்துபோல் உருண்டவடிவினவாய் அமைந்திருக்கின்றன.

இனி, இவ்விந்துவினியக்கம் நேர் செல்லாமற் சுழல் சுழலாய் நடைபெற வேண்டுவ தென்னையெனிற்; கூறுதும். எல்லாம் வல்ல முதல்வனுடைய இருப்பு ஓர் எல்லைக்குள் அகப்படாத பரப்பினை உடைத்தாம். அம்முதல்வனோடு ஒற்றித்து நிற்கும் விந்துவும்எல்லையறியப்படாத பரப்பினை உடைத்தாம். நாற்புறத்தும் வரம்பறுக்கப்பட்ட அளவினை யுடைய பொருளாயின் அஃது இங்குமங்குமாய் அசைதல் சாலும். அங்ஙனம் ஒரு வரம்பிற் படாமல் எங்கும் நிறைந்த பொருளாயின், தான் இல்லாத டம் இன்மையின் அஃது முன்பின்னானுங் கீழ்மேலானும் அசைதற்கு வாயிலில்லை; ஆனதுபற்றியே, கடவுளை அசைவற்ற பொருளென்று அறிவு நூல்கள் கூறுவவாயின. அக்கடவுளோடு ஒருமித்து நிற்கும் விந்துவும் தானில்லாத வெற்றிடம் வேறின்மையின் அதுவும் நாற்புறத்தம் இயங்கமாட்ாதாம். ஆகவே, அஃது இறைவனது செயன் மதுகையால் உந்தப்பட்டுழித் தனது மையத்தே சுழிந்தியங்குவதாயிற்று. பின்னர் அவ்விந்துவினாற் றாக்கப் பட்டமாயையினும் அதன் காரியங்களான பிரகிருதி முதற் பூதாகாயத்தினும் அதன் கீழ் நின்ற கால் அனல் நீரினுங்கூட அச்சுழிந்த இயக்கம் நடைபெறா நிற்கின்றது. காற்றுக் கடுகி

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/149&oldid=1591479" இலிருந்து மீள்விக்கப்பட்டது