உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

125

வீசுங்காற் சுழன்று சுழன்று போதலும், தீ முறுகி எரியுங்காற் சுழன்று சுழன்றெரிதலும், நீர் ஆழ்ந்து பெருகி ஓடுங்காற் சுழிந்து சுழிந்து செல்லுதலும் அவற்றை உற்று நோக்கினார்

நன்குணர்ந்திருப்பர்.

இனி இஞ்ஞான்றை இயற்கைப்பொருணூலார் நுண்ணிய னி கருவிகளின் வாயிலாற் பூதாகாயத்தை ஆராய்ந்து பார்த்து அப்பூதாகாயத்தின்கட் சுழன்று சுழன்று மேற்செல்லும் ஓரியக்கம் ஓவாது நடைபெறுகின்ற தென்றும், பொற்கம்பி சுழன்றாற் போற் றோன்றும் அவ்வியக்கத்தின் வரம்புகளில் அவ்வாகாயத்தின் இடை நின்ற அணுக்கள் திரட்டப்படுதலும் பிரிக்கப்படுதலுமாய்த் தொழிற்படுகின்றன வென்றும், இவ்வாற்றாற் கட்புலனாகாத வெளியினின்று கட்புலனாம் பொருள்கள் முறைமுறையே ஒன்றினொன்று பரியனவாய்த் தோன்றுகின்றன வென்றும் உரை நிறுவுகின்றார். இதனானும், சுழன்றியங்கும் விந்துவின் இயக்கமே எல்லா உலகங்களும் அவ்வுலகத்துப் பொருள்களுந் தோன்றுதற்குத் துணைக் காரணமாதல் தெற்றெனப் புலப்படா நிற்கும்.

6

வ்

இனி இச்சுழன்ற இயக்கமே விந்துவாவதன்றி, வியக்கத்தின் வேறாக விந்துவென்றோர் உள்பொருள் உளதாதல் எற்றாற் பெறுதுமெனின்; இயக்கமென்பது தன்னைப் பயக்கும் பொருளின்வேறாய்ப் பிரிந்து நிற்பதன்று இயக்கமும் இயக்கத்தைத் தரும் பொருளுந் தற்கிழமைப்பட நிற்பன வாமாகலின். அப்பொருளின் வேறாக இயக்க முண் முண்பெ டன்றல் பொருந்தாவுரையாம். எனவே இச்சுழன்ற இயக்கத்தைத் தோற்றுவிக்கும் விந்துவென்றொரு பாருளுண்மை தேற்றமேயாம்.

அற்றன்று, இச்சுழன்ற இயக்கத்தை மாயையின்கட் பயப்பிப்பது இறைவனது ஆற்றலேயாகலின், அதுவே, அதற்குரிமைப் பொருளென் றுரைத்தால் வரும் இழுக்கென்னை யெனின்; அவ்வாற்றல் சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாக் கழிபெருங் கதழ்வுடைத்தாதலும், அது தன்னை நேரே ஏற்றுத் தொழிற்படுதற் காந்தன்மை மாயையினிடத்து இன்றாதலும் மேலே காட்டிப் போந்தமையின் அச்சுழன்ற இய இயக்கத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/150&oldid=1591480" இலிருந்து மீள்விக்கப்பட்டது