உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

நேரே

மறைமலையம் 28

யுரித்தாவது முதல்வனதாற்றல் ஆமாறில்லை. இன்றாகவே, முதல்வனதாற்றலை ஏற்று அதனை மாயையின் கண் உய்க்கும் விந்துவினிருப்பு ஒரு தலையாகப் பெறற்பால தேயாம்.

அற்றேல் விந்துவெனப்படும் இம்மின்னை ம்மின்னை இற்றை ஞான்றை இயற்கைப் பொருணூலார் ஒருவகையான அசை வென்றுரைப்பக் காண்டுமன்றி, அதனை ஒரு பொருளென்று அவர் கொள்ளாமையென்னையெனின்; இற்றை ஞான்றை இயற்கைப் பொருணூலாரிற் பெரும் பாலார் இம்மின்னின் இயல்புகளை முற்ற வறிந்து முடிவு காணாமையின் அதனை ஓர் அசைவென்றே கூறினாராயிநும், மேலும் அவர் அவ் வியல்புகளை முழுதுணரப் பெறுங்கால், அதனை ஒரு பொரு ளென்று கூற ஒருப்பட்டெழுவார் என்பதற்கு, அவருள் இவ்வாராய்ச்சி யில் மிக மேம்பட்டு விளங்கிய அறிஞரிற்சிலர்8 அதனை ஓர் உள்பொருளென்றுரைக்கத் தலைப்பட்டமையே சான்றா மென்க. ஆகவே, சுழன்ற இயக்கத்திற்குக் காரணமாக விந்துவென்னுஞ் சுத்தமாயை ஒன்று துணியற்பாலதேயாம்.

உண்மை

னிது

அடிக்குறிப்புகள்

1.

Scholars of Natural Science

2.

Thermometer

3.

Electric Light

4.

Oxygen

5.

Steam Engine

6.

7.

8.

Prof. William Crookes, M.C. Wolf and some other scientists.

Galled by Crookes as protyle.

Maxwell, Helmholtz, William Grove, etc.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/151&oldid=1591481" இலிருந்து மீள்விக்கப்பட்டது