உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

5. நாதம்

இனி இச் சுழிந்த இயக்கத்தைத் தோற்றுவித்தல் பற்றி னி இவ்விந்துதத்துவம் வட்டவடிவினது புள்ளிவடிவினது என்று நூல்களால் நுவலப்படும். இப்புள்ளியின் அசைவிலி ருந்து ஓசை யுண்டாதலால், அவ்வோசையே நாததத்துவ மென்று வழங்கப்படும். புள்ளியின் அசைவாற் பிறக்கும் நாதம் பாம்பு நெளிந்தாற்போல் நெளி நெளிவாய் நீளச் செல்லுதலின் அது வரிவடிவிற்றென்று சொல்லப்படும். இந் நாத தத்துவமே உலகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதாம்; யாங்ஙனமெனிற் காட்டுதும். இந் நாத தத்துவத்தின் உந்தலாற் கீழ் நின்ற அசுத்தமாயையிற் பிறக்கும் முப்பது தத்துவங்களிற் கீழே கடைமுறையில் நின்ற மண் நீர் அனல் கால் வான் என்னும் ஐம் பூதங்களுள் ஒன்றான வானிற் றோன்றும் ஒலி நாத தத்துவத்தினை ஒரு புடையொப்ப தாகலின், இவ்வொலி யினியற்கையை ஒரு சிறிது ஆராயவே, நாததத்துவத்தினி யற்கை தெள்ளிதிற் புலனாம். வானின்கட் கிடக்கும் ஒலி வீணை யாழ் குழல் குரல் முதலிய கருவிகளின் வாயிலால் இந்நிலத்தின்கட் செவிப் புலனாகின்றது. ஒரு வீணையின் கம்பிகளின் மேல் அவ்வீணையின்வில்லை வைத்து இழுத் தால் அதன் கம்பிகள் அசைந்து இனிய ஓசையினைப் புலப் படுத்துகின்றதன்றோ? இங்ஙனம் புலப்படும் ஓசை அருகே யுள்ள மிகமெல்லிய நுண்ணிய பொருள்களின்மேற் பட்டால் அவற்றைப் பலவேறு வடிவங்களாகத் திரிவுபடச் செய் கின்றது; மெல்லிய ஒரு கண்ணாடித் தட்டத்தில் நுண்ணிய பொடிகளைப் பரப்பி அதன் கண் அவ்வீணையினோசை வந்து படுமாறு ஒழுங்கு செய்து வைத்துப் பின்னர் அவ்வீணையை இயக்கினால், அதன் கட்டோன்றுமொலி அப்பொடிகளின் மேற்பட்டு அவற்றைப் பலதிறப்பட்ட வடிவு கொள்ளுமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/152&oldid=1591482" இலிருந்து மீள்விக்கப்பட்டது