உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

  • மறைமலையம் - 28

செய்கின்றது. இன்னும், ஒரு கண்ணாடிக் கிண்ணத்தை அரைப்பாகந் தண்ணீர் நிறைத்து, அதன் விளிம்பின் மேல் அவ்வில்லை வைத்திழுக்க அது தன்னளவிற் கேற்ற ஓர் ஒலியைத் தன்கட் பிறப்பிக்கும்; பின்னர் அதே அளவான ஒலியை அவ்வில்லால் அவ்வீணை யிற் றோற்று விக்க, அதே ஒலி அருகு நின்ற அக்கண்ணாடிக் கிண்ணத் தினின்றுந் தானே வருதலை எவரும் வியப்புறக் காணலாம். அவ்வீணையிற் பிறக்கு மொலியின் எதிரொலி யாய் அக்கண்ணாடிக் கிண்ணத்தினும் அவ்வோசை தோன்றுங்கால், அக் கிண்ணத்தின் உள் நின்ற நீர் அலை யுறுதலுங் காணப்படும். மற்று அக்கிண்ணந் தன்கட் பிறப் பிக்கும் ஓசையின் அளவைப் பிறிதொரு பெரிய இசைக் கருவியின்கண் மிகுதிப்படுத்தி இசைப்பித்தால், அவ்விசை அக்கிண்ணந் தாங்கும் அளவினும் மேற்படுதலால் உடனே உடைத்தெறியும். இங்ஙனமாகப் பூதாகாயத்தின் கட்டோன் றும் ஒலியே தான் சாரும் பொருள்களை ஆக்குதலும் நிலைப்பித் தலும் அழித்தலுஞ் செய்து போதருமாறு ஆராய்ந்து காண வல்லார்க்கு, இதனோ டொருவாற்றான் ஒப்பதாயினும் இதனினும் இறப்ப நுண்ணிய நாத தத்துவம் அசுத்தமாயையை முத்தொழிற் படுத்துமியல்பு நன்கு விளங்கும்.

இன்னும் இந்நாததத்துவத் தினியற்கை, இசையினால் நம்மனோர் மாட்டு நிகழும் நிகழ்ச்சி வேறுபாடுகள் பற்றியும் நன்குணரப்படும். மிக இனிய யாழோசை குழலோசைகளைக் கேட்கும் எவரும் எவ்வுயிரும் உள்ளங் குழைந்து இன்ப வயத்தராய் நிற்றல் காண்டுமன்றோ? மருந்துகளிற் றீராத கொடிய நோய் கொண்டவர்களுள் அமைதியாய் இருந்து இன்னோசைகளை அடுத்தடுத்துக் கேட்டு வருகுவராயின், அவர்க்கிருந்த அந்நோய் தீர்ந்து நலப்படுமாற்றை இஞ்ஞான்றை மனநூல் வல்லார் ஆராய்ந்து நிறுவியிருக்கின்றனர். இம் முறையை நுனித்தறியுங்கால் இனிய வொலி நம்மூளையிற் படிந்து அதன் கண் வந்து தொகும் பலகோடி நரம்புகளையும் சைவுற அசைத்து இனிதின் இயங்கச் செய்தலால், இவ்விசைவினோடு மறு தலைப்பட்ட நோய் அங்கிருக்க லைக்களன் காணாமல் நீங்கி ஏகுகின்றது. இசையேயன்றி இனிமையாய்ப் பேசும் மொழிகளும் ஒருவர்க்கு எவ்வளவு கிளர்ச்சியையும் இன்பத்தையுந் தருகின்றன!

ம்

ன்னா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/153&oldid=1591483" இலிருந்து மீள்விக்கப்பட்டது