உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

129

மொழிகளும் இசைவற்ற வோசைகளும் எவ்வளவு துன்பத் தைத் தருகின்றன! வேய்ங்குழலிசையினைக் கேட்டு மகிழ்ந் தாடிய அரவு நடுக்கந்தரும் இடி முழக்கங்கேட்டு மாழ்கி மடிகின்ற தன்றோ! பீரங்கி வெடி கேட்ட கருக்கொண்ட மாதரார் தமது கருச்சிதைந்து இறத்தலும், மெல்லிய இயற்கை வாய்ந்தோர் நெஞ்சங் கலங்கி உயிர் துறத்தலுங் கண்கூடாய் அறியப்பட்ட உண்மைகள் அல்லவோ! இந்நிகழ்ச்சிகளின் றன்மைகளை உற்றறியுங்கால் நாததத் துவம் எதனையும் ஆக்கவும் நிலை நிறுத்தவும் வல்லதென் பது நன்கு விளங்கு கின்றதன்றோ! அது கிடக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/154&oldid=1591484" இலிருந்து மீள்விக்கப்பட்டது