உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

6. விந்துநாதவடிவுகள்

இங்ஙனஞ் சுழல் சுழலாய் நீள இயங்கும் விந்து நாத வடிவின் சேர்க்கையையே பாம்பு வடிவாக அறிவு நூல்கள் ஆங்காங்கு கூறா நிற்கும். நீள நெளிந்து செல்லும் பாம்பின் வடிவு போல்வதே நாதவடிவாமென்றும், அப்பாம்பின் படம் போல்வதே விந்துவடிவாமென்றும் மேலே காட்டப்பட்ட தாகலின் இத்தத்துவங்களின் சேர்க்கை வடிவைப் பாம்பாக ருவகப்படுத்திக் கூறுவது சாலவும் பொருத்த முடைத்தேயாம்.

இனி, எல்லா ஒலிகளுக்கும் முதலான பிரணவ வோசை இவ்விந்து நாதங்களின் சேர்க்கையேயாதலின் அது வரிவடிவில் எழுதப்படுங்கால் ஓகாரவடிவாகவே எழுதப்படு கின்றது. துவங்குமிடத்திற் சுழித்துப் பின்றொடருமிடத்தில் வரிசையாக வளைத்து வரையப்படும் ஓ என்னும் எழுத்திற் சுழியே விந்துவென்றும் வளைந்த வரியே நாதமென்றும் உணரற்பாற்று. இன்னும் இவ் ஓ என்பது சேர்க்கை எழுத்தாகலின், இதன்கட் கலந்து நின்ற அகரமும் உகரமும் ஆகிய தனியெழுத்துக்கள் இரண்டும் அவ்விந்து நாதவடிவே யுடையவாதலும் நுனித் தாராயப்படும். அகரம் பண்டைக் காலத்திற்புள்ளி அல்லது வட்டவடிவாகவே எழுதப்பட்டு வந்த தென்பதற்கு, அவ் அகரம் பிரிந்து நின்ற ஒற்றெழுத்துக்களின் றலையிற் புள்ளியிட்டெ ழுதுதலே சான்றாம். க் முதலான ஒற்றெழுத்துக்கள் அகரத் தோடு கூடிய வழி மேல் நின்ற புள்ளி நீக்கி எழுதப்படுதலும், அவ் அகரத்தைப் பிரிந்து நின்றவழி மேலே புள்ளி வைத்தெழுதப் படுதலும் என்னை யென்று நுணுகி ஆராய லுறுவார்க்கு ஒற்றெழுத்துக்களின் மேனின்ற புள்ளியே அகர வடிவாமென்பது தெற்றெனப் புலப்படும். மக்கள் முதலான இயங்கியற் பொருள் நிலையியற் பொருள்களின் ாருள்களின் உயிர் போறலின் உயிரெழுத் தென்றும், உயிரின் சேர்க்கை யானன்றித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/155&oldid=1591485" இலிருந்து மீள்விக்கப்பட்டது