உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

131

தனித்தியங்கா மெய் போறலின் மெய்யெழுத் தென்றும் தமிழ் எழுத்துக்கள்அஃகி அகன்ற அறிவுடைய ரான தொல்காப்பியனார் முதலான தொல்லாசிரியரால் வழங்கப்படுவ வாயின. உயிர் உடம்போடு கூடியவழித் தன் உருவு காட்டாது தனதுடம்பின் வடிவையே தனக்கும் வடிவாகப் பெற்றிருத்தல் போல, அகரமும் மெய் எழுத்துக்க ளோடு புணர்ந்த ர்ந்த வழித் தனக்குரிய புள்ளி வடிவைக் காட்டாது தான் புணர்ந்து நின்ற மெய்வடிவே காட்டுவ தாயிற்று. அகரமல்லாத ஏனையுயிர்கள் ஒற்றெழுத்துக்க ளோடு கூடியவழி அவற்றிற்குத் தமதுருவைச் சிறிது சிறிது கொடுத்து அம்மெய் வடிவை வேறுபடுத்தக் காண்டலின், ஏனையுயிர் மெய்களின் கண் அங்ஙனம் வேறுபட்டுத் தோன்றும் வடிவுகள் கொண்ட அகரமல்லாத மற்றை யுயிர்களின் வடிவுகள் ஒருவாறு துணியப்படும்; மற்று அகரத்தொடு புணர்ந்த மெய்கள் அங்ஙனம் வடிவுவேறுபடக் காணாமையானும், அகரத்தைப் பிரிந்துழிமாத்திரமே தலைமேற் புள்ளி பெற்று நிற்றலானும் அவ்வொற்றைப் பிரிந்து மேனிற்கும் புள்ளி வடிவே அகரவடிவாமென்பது நன்கு துணியப்படும். பிற்றை நாளில் அப்புள்ளியினையே தலையிற்றந்து பின்னும் வரிவளைவு சேர்த்து அகரத்தை எழுதி வழங்கலாயினார்; வழங்கினும், ஒற்றெழுத்துக்களின் மேல்அதன் பண்டைப் புள்ளி வடிவைத் திரிவு படுத்தாது பொறித்து அதன் வடிவ வுண்மையும் புலப்படுத்தினாரென்க. இவ்வாற்றால் அகரவொலி வட்ட வடிவினதான விந்துவே யாதல் தெளியப்படும். மேலும், அகரவொலியைத் தோற்று விக்கின்றுழி அதனை அங்காந்து கூறும் வாய் வட்டவடி விற்றாதலுங் கண்டறியற் பாற்று. அற்றோல் அஃதாக; நாத தத்துவ மாத்திரையே ஓசை யுடைய தல்லது, அந்நாதத்தின் அசைவிற்குக் காரணமாம் விந்து ஓசையுடைத்தன்றாம்; அற்றாக; அதுவும் ஒலிவடிவிற் றென்றுரைத்தல் யாங்ஙனம் பொருந்துமெனிற்; கூறுதும். விந்து அசைவின்றிக் கிடந்த நிலையில் ஓசையின்றாமாயினும், அஃதிறைவனருளால் உந்தப்பட்டு இயங்குகின்றுழி ஓசை யுடைய தாயே இயங்கும். ஆயினும், அது முறுகிச் சுழலுங்காற் செவிப் புலனாம் ஓசையும் அங்ஙனமின்றி மெல்லென யங்குங்காற் புலப்படாத ஓசையும் உடைத்தாம். இவ்விரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/156&oldid=1591486" இலிருந்து மீள்விக்கப்பட்டது