உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் - 28

வாயை வறிதே அங்காத்தற்

வேறியல்பும் கண்ணும் அவ்வங்காப்போடு அகரத்தை ஒலிப்பித்தற்கண்ணும் வைத்து அறிந்து கொள்ளப்படும். வாயை வறிதே அங்காத்தலிற் புலப்பட்ட ஓசையின்றாயினும் ஆண்டும் அகரம் புலப்படாது உண்மை மறுக்கப்படாதாம்; என்னை? அங்காத்த லென்பது மேல் வாயும் கீழ்வாயும் பிரிந்தியங்கும் முயற்சியே யாகலானும், ஒரு புடை பெயர்ச்சி நிகழும் வழியெல்லாம் செவிப்புலனாம் ஒலியேனும் செவிப் புலனாகா ஒலியேனும் உண்டென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையானும் என்பது. அற்றேல், ஒலிவடிவாய நாத தத்துவத்திற்கும் அங்ஙனமே ஒலிவடிவிற்றாய் விந்து தத்துவத்திற்கும் வேறு பாடென்னை யெனின்; விந்து புலப்பட்டும் புலப்படாது மிருக்கும் சிறியதோர் ஓசையுடைத்து, நாதமோ தொடர்புபட்டு நிகழும் புலப்பட்ட ஓசையுடைத்தாம்.

விந்து வட்டவடிவினதான

அகர

அற்றாகலினன்றே, வடிவாகவும், நாதம் தொடர்பு பட்டு நீண்ட வரிவடிவின தான உகர வடிவாகவும் எழுதப் படுவ வாயினவென்க. விந்து நாதங்களின் சேர்க்கையின்றி ஒலியுலகும் பொருளுலகுந் தோன்றி நிலை பெறாமை போல, இவற்றின் வடிவுகளான சுழியும் வரியும் இன்றி ஏனை எழுத்துக்களின் வரி வடிவும் புலப்பட்டு நில்லாவாம். ஆகவே, உயிரும் மெய்யும் உயிர் மெய்யுமாகிய எல்லா எழுத்துக்களிலும் இச் சுழி வடிவும் வரிவடிவும் உண்மை நுனித்துக் காண்பார்க்குத் தெற்றென விளங்கா நிற்கும்.

அற்றேல், வரிவடிவின்கண் எல்லா வெழுத்துக்களினும் சுழியும் வரியுங் கலந்து நின்றாற்போல், ஒலி வடிவின் கண்ணும் எல்லாவெழுத்துக்களினும் விந்து நாதங்களான அகார உகாரவொலிகள் கலந்து நிற்றலைக் கண்டிலமா லெனின்; நன்று கடாயினாய், வாயை அங்காவாமல் ஏதோர் எழுத்துங் கூற ஏலாமை மேல் கீழ் இதழ்களை ஒரு சிறிதுந் திறாமலிருந்து ஒருவர் எத்துணை தான் ஓர் எழுத்தைக் கூறமுயலினும் அது கடைபோகா மையின்கண் வைத்து இனிதறியக் கிடத்தலானும், வாயை அங்காந்த மாத்திரையே ஆண்டு அகரவோசை புலப்படா துண்டென்பது மேலே காட்டப்பட்டமை யானும், அங்ஙனம் அங்காந்து கூறு முயற்சிக்கண் வேறோர் எழுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/157&oldid=1591487" இலிருந்து மீள்விக்கப்பட்டது