உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

133

ஐயுற

ஒலிப்பிக்கப்படினும் அவ்வெழுத்தோசையோடு உடன் ஒற்றித்து அகரவொலியும் விரவி நிற்றல் ஒருதலையாக வேண்டப் படுதலானும் ஆண்டும் நுனித்துக்காணலுறின் எல்லா எழுத்தொலி களிலும் அகர வொலியுண்மை வின்றித் துணியப் படும். அஃதொக்கு மாயினும், உகரவொலியும் அதுபோல் ஏனை எல்லா எழுத்துக்களினுங் கலந்து நிற்றல் யாங்ஙனம் பெறப் படுமோ வெனின்; அங்காந்து கூறு முயற்சிக்கட் சுழன்றிசைத்த அகரவொலி பின்னர் வாயைக் குவித்துக் கூறுதற்கண் நீண்டோடி நிலைபெறுவதே

டை

உகரவொலியா வாலியா மாகலான் அஃது ஊ ஒ ஓ ஓள ஒ ஓ ஓள என்னும் எழுத்தோசைகளிற் புலப்பட்டும், ஏனை உயிர் ஒற்றுக்களின் ஓசைகளில் அகரம்போற் புலப்படாதும் நிற்குமென்றறியற் பாலதாம். அல்ல தூஉம், எல்லா எழுத்தோசை கட்கும் வாய் அங்காப் போடு, அங்காந்த வாயை உடனே மூடாமற் சிறிது நிறுத்து தலும் வேண்டுதலானும், அங்காப்பின் கண் இயல்பாய் ஒலிக்கும் அகரமும், அங்காந்தவாய் மூடாமற் சிறிது இடை நின்று குவிந்த வழி இயல்பால் ஒலிக்கும் உகரமும் பின்னர்ச் செயற்கையாற் பிறக்கும் எல்லா எழுத்தொலிகளினும் விரவி நிற்றல் திண்ணமேயாம். இவ்வாறாக, எல்லாவெழுத்துக் களின் ஒலி வடிவு வரிவடிவுகளினும் விந்து நாதங்களாகிய அகார உகாரங்கள் கலந்து நிற்றல் அறியற்பாற்று. இவை யிங்ஙனம் எல்லாவற்றிற்கும் முதலாதல் பற்றியன்றே, ஏதொன்றெழுதத் தொடங்கும் முன்னும் சுழிந்திருக்கும் பிள்ளையார் சுழி (உ) எனப்படுவதனை முதற்கட்குறிக்கும் வழக்கம் நம்மனோர்பாற் றொன்றுதொட்டு வரலாயிற்று. விந்து நாதங்கள் இவ்விரண் டனுள்ளும் விந்து முதலாய் நிற்றல் தெரித்தற் பொருட்டன்றே ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், அகரமுதல எழுத்தெல் லாம்” என்று ஓதுவாரா யினதூஉ மன்க. ஈண்டு எழுத்தெல் லாம்' என்றது வரிவடிவு ஒலிவடிவில் நின்ற எல்லா எழுத்துக்களையும் அகப்படுத்தற் பொருட்டு; 'அகரம்' என்றது புலப்பட்டும் புலப்படாதும் நின்ற அகரவொலியி னையும் அகரவடிவினையும் உணர்த்துதற் பொருட்டுப் பொதுப்பட நின்றமையும் உய்த்துணரற் பாலதாம் என்க.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/158&oldid=1591488" இலிருந்து மீள்விக்கப்பட்டது