உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

7. விந்துநாதக்குறிகள்

இனி, விந்துவெனப்படும் மின்னொளியோடு ஒரு புடையொத்து அதன்றன்மையினை ஒருவாற்றான் நமக்குப் புலப்படக் காட்டுவது தீயேயாகும்; என்னை? மின் வெம்மையும் ஒளியும் உடைத்தாய்ச் சுழன்று இயங்குமாறு போலத் தீயும் சூடும் விளக்கமும் வாய்ந்து சுழன்றெரியக் காண்டலால் என்க. எனவே விந்துநாதக் குறிகளும், அவ்விந்து நாதங்களில் முதல்வன் முனைத்து நின்று விளங்குமாறும் தீப்பிழம்பின்கண்

"66

6

வத்து அறியப் படும். இவ்வுண்மை தெருட்டுதற் பொருட்டன்றே “பொங்கழலு ருவன் பூதநாயகன்” எனவும், "எரிபெருக்குவர் அவ்வெரி ஈசன துருவருக்கமதாவதுணர் கிலார்” “எரியலால் உருவ மில்லை” “விறகிற்றீயினன்" எனவும், “சிவன்கண்ணா முந்தவே காட்டாக்கிற்றோன்றி” “காட்டத்தில் அங்கி வேறுண்டல் போல் நின்றங்குள தாமால்” எனவும் உண்மை நூல்கள் உரைப்ப வாயின. அற்றேல், மண் புனல் கால் வான் முதலான ஏனைத் தத்துவங்களும் உளவாக, எல்லாப் பொருள்களினும் நிறைந்து நிற்கும் இறைவன் தீயின்கண் மட்டும் முனைத்து விளங்குவ னென்றல் யாங்ஙனமெனிற் கூறுதும் ஒருவாற்றா லேனும் எஃது எதனையொப்பது அஃது அதனோடு ஒருமித்து நிற்கும் என்னும் மாறா உடன் நிகழ்ச்சியால், ரோவழி முனைவனியல் போடு ஒத்து நிற்கும் விந்து நாதங்களினும் தீப்பிழம்பினும் அம்முதல்வன் முனைந்து நிற்பனென்பது அறியற்பாற்று. இனி இறைவன் அறிவொளி யுடையவனாதல் போலத் தீயும் ஒளியுடைமையானும், அவன் அவ்வறிவொளியால் உயிரை மறைத்த அறியாமை வல்லிருளைத் துரக்குமாறு போல இதுவுந் தனதொளியாற் கண்ணை மறைத்த காரிருளை நீக்குத லானும், இறைவன் உயிரினைப் பற்றிய வாலாமையினைச் சுட்டெரித்துத் தூய்தாக்குமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/159&oldid=1591490" இலிருந்து மீள்விக்கப்பட்டது