உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

135

போலத் தீயும் நிலத்தின்கட் சேருங்குப்பை கூளங்கள் அழுக்குகள் எல்லாவற்றையுங் காளுத்தி நீறாக்கித் தூய்தாக்குதலானும், அங்ஙனம் முதல்வன் வாலாமையினைத் தூய்தாக்கும் வழி அதனாற் றான்சிறிதும் பற்றப்படாது தான் அதனைத் தூய்மைப் படுத்துமாறுபோலத் தீயும் தன்னால் எரிக்கப்படும் அழுக்குகளாற் பற்றப்படாது தான் அவற்றைச் சுட்டுத் தூய்மை செய்தலானும் இறைவன் படைத்தல் காத்தல் அழித்தலென்னும் முத்தொழில்கள் புரியுமாறுபோலத் தீயின் வெம்மையும்

நீரினும் நிலத்தினும் புற்பூண்டுகளினும் உயிர்களின் உடம்புகளினும் ஓரளவுபடப் பரவி நின்று படைத்தல் காத்தல்களையும் தான் அவற்றின் கண் நிற்கவேண்டும் அளவின் மிக்குத் தோன்றியவழி அவற்றை அழித்தற்றொழிலையும் நிகழ்த்துதலானும், இறைவன் வெய்ய னாய்ச் சிவந்த அருள் நிறம் உடையனாதல் போலத் தீயும் வெய் தாய்ச் சிவந்தநிறம் வாய்ந்து நிற்றலானும், இறைவன் நீல அருள் நிறம் வாய்ந்த அருட்சத்தியைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கு மாறு போலத் தீயும் நீலநிறம் பொருந்திய தண் நீரினைத் தன்னுள் அடக்கிவைத்திருத்தலானும், இறைவன் அருவம் உருவம் இரண்டற்கும் பொதுவான அருவுருவம் உடையனாதல் போலத் தீயும் அருவம் உருவம் இரண்டற்கும் பொதுமை யாய் நிற்கும் பிழம்பு வடிவு உடையதாய் நிற்றலானும் இறைவன் உலகுயிரெல்லாம் ஒருங்கு நிறைந்து நிற்றலும் அன்பர்க்கு அருள்புரிதற் பொருட்டு ஒரோ விடத்து முனைத்து விளங்கித் தோன்றுதலும் உடையனாதல் போலத் தீயும் எல்லாப் பொருள்களினும் ஊடுருவி நிற்றலும் உயிர்கட்குப் பயன்படு முகத்தால் ஒரோவயின் விளங்கித் தோன்றுதலும் உடைத்தாக லானும், அகத்தே உயிர்களின் அறிவை விளக்குதற்கு இறைவன தொளி இன்றியமையாது வேண்டப்படுதல்போலப் புறத்தே கண்ணறிவை விளக்குதற்குத் தீயினொளி இன்றியமையாது வேண்டப்படுதலானும் தீ ஒருவாற்றால் இறைவனியல்போடு ஒப்புடையுடைத்தென்பது அறியப்படும். இவ்வொப்புமையால் இது தன்மாட்டு முதல்வன் முனைத்து விளங்குதற்கு இடமாம் பெற்றியுடைத்தானாற் போல, இவ்வொப்புமையில்லா ஏனை நிலன் நீர் கால்வான் முதலான பொருள்கள் அவன் முனைத்துத் தோன்றுதற்கு வாயிலாக மாட்டாவென்க. கட்புலனாகாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/160&oldid=1591491" இலிருந்து மீள்விக்கப்பட்டது