உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

  • LD60LD60QUUILD - 28 மறைமலையம்

கடவுளைக் கட்புலனெதிரே விளங்கக் கண்டு வழிபடுதற்கு ஈது இடைநின்றுஉதவி புரிதலானன்றே, இருக்கு வேதம் முழுவதூஉம் இடையிடையே அங்கி வழிபாடு மிகுத்தோதப் பட்டதோடு அவ்விருக்கு வேதப் பத்து மண்டிலங்களிலும் முதல் நின்ற ஏழு மண்டிலங் கடோறும் முதற்கண் அங்கியங்கடவுள் வழிபாடு சிறந் தெடுத்து வைக்கப்பட்டு அங்கிக்கண் விளங்கும் உருத்திரன் ஒருவனே அவ்வேதத்தான் அறிவுறுக்கப்பட்ட முழு முதற் கடவுளென்பது தெற்றெனப் புலப்படுதல் வேண் அவ்வேதத் தின் இறுதிக்கண்நின்ற பத்தாம் மண்டில முதலினும் முடிவினும் அவ் அங்கியங்கடவுள் வழிபாடே விதந்தெடுத் துரைக்கப்பட்டது. அங்கி எனப்படும் தீ இடமாயும், அத்தீயின் கண் நிறைந்து முனைத்து விளங்கும் முதல்வன் அவ்விடத்தின் கண் உள்ள பொருளாயும் பிரிவற நிற்கும் இயைபு கொண்டு, ஓர் இடத்தின் பெயர் அவ்விடத்து நிகழ் பொருளுக்கும் இடத்துநிகழ் பொருளின் பெயர் அதுநின்ற இடத்திற்குமாக ஏற்றி வழங்கப்படும் இலக்கண வழக்குப் பற்றி, அங்கியின் பெயர் அதன்கண் முனைத்து விளங்கும் உருத்தி ரற்கும் உருத்திரன் பயர் தான் நிற்றற்கிடமான அங்கிக்கும் ஒரோவழி வழங்கப்படுதல் அவ்விருக்கு வேத மந்திரங் களினும், அவற்றிற்கு வரையப் பட்ட உரைகளினுந் தெளிவுறக் காண்க. இருக்குவேத முதன் மண்டிலத்தின் இருபத்தேழாம் பதிகத்தின் பத்தாவது மந்திரத்திலும், இரண்டாம் மண்டிலத்தின் இரண்டாம் பதிகத்தின் ஐந்தாவது மந்திரத்திலும், நான்காம் மண்டிலத்தின் மூன்றாம் பதிகத்தின் முதல் மந்திரத்திலும் உருத்திரன் எனும் பெயர் அங்கியங் கடவுட்கு வழங்கப் பட்டமையும், முதன் மண்டிலத்து நாற்பத்து மூன்றாம் பதிகத்தில் "உருத்திரன் வேள்விகட்குத் தலைவன்" என்றும், நூற்றுப்பதினைந்தாம் பதிகத்தில் “வேள்விகளை முடித்து வைப்பவன்” என்றும், “சிவனெனு நாமந்தனக்கே யுடைய செம்மேனி யெம்மான் என்று தேவாரத்தில் ஓதப்பட்ட வாறே மேற்குறித்த இருக்கு வேதப் பதிகங்கள் இரண்டிலும் அப்பெருமான் சிவந்த நிறத்தினன் என்றும் உரைக்கப் பட்டமையும் முதல்வற்கும் தீப்பிழம்பிற்கும் உள்ள இயை பினை நிலைபெற நாட்டும்.

னி

இயற்கை அனற் பிழம்பு வடிவாய்த் திகழும் ஞாயிற்று மண்டிலம் இறைவனது அருளுருவ விளக்கத்திற்கு

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/161&oldid=1591492" இலிருந்து மீள்விக்கப்பட்டது