உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

137

இடமாயிருத்தலினாலன்றே அஞ்ஞாயிற்று மண்டிலத்தினை நோக்கிச் செய்யும் வழிபாடு இருக்கு மாமறையின்கண் ஆண்டாண்டுக் கூறப்பட்டதோடு, அஞ்ஞாயிற்றினைக் காலை நண்பகல் மாலையெனும் முப்பொழுதினுந் தொழுங் கால் எடுத்துரைக்குங் காயத்திரி மந்திரமும் அம்மறையின் மூன்றாம் மண்டிலத்து இறுதிப்பதிகத்தின்கண்ணும் வலியுறுத்து வைக்கப் படுவதாயிற்று. இக் காயத்திரி மந்திரத்தின் நடுநின்ற பர்க்கன் என்னும் பெயர் அஞ் ஞாயிற்று மண்டிலத்தினுள் நின்று அதற்கு உயிராய் விளங்கும் இறைவனைக் குறித்தலும், அங்ஙனம் அப் பெயராற் சுட்டப்படும் முதல்வன் சிவபிரானே என்பதற்கு அமர நிகண்டில் அப்பெயர் சிவபிரானுக்கே உரிய சிறப்புப் பெயர் களுள் ஒன்றாக வைத்துக் கூறப்பட்டிருத்தலும், இவ்வுண்மை யெல்லாம் முற்றுமுணர்ந்த தோலாநாவின் மேலோரான திருநாவுக்கரசு அடிகள் "அருக்கன் பாதம் வணங்கு வரந்தியில், அருக்கனாவான் அரனுருவல்லனோ' என்று அருளிச் செய்திருத்தலும் எல்லாம் வல்ல இறைவன் எல்லாவுயிர்களுந் தனதருளுருவைக் கட்புலனெதிரே கண்டு வழிபட்டு உய்வான் வேண்டி வைத்த பேரிரக்கத்தால் தனது அவ்வுருவை நேரே காட்டுதற்குத் தக்கவாயிலாய் அமைந்த அனல்வடிவின்கண் முனைத்து விளங்குவானாயினன் என்னும் உண்மையை நன்கு நிறுவுமென்க.

6

இனிப்

பண்டைக்காலந்தொட்டு இந் நிலவுலகம் யாங்கணும் உள்ள மக்களெல்லாரும் ஞாயிற்றினுந் தீப்பிழம்பி னுமே இறைவனை நேரே கண்டு வழிபட்டு வரலாயின ரென்பதும் அறியற்பாற்று. பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே நாகரிக வாழ்க்கையிற் சிறந்து விளங்கிய எகுபதியர்' ஞாயிற்றினை வழிபட்டு வந்தமை அவர் தம்முடைய கோயிற் சுவர்களில் பொறித்து வைத்த கல்வெட்டுகளால் நன்கு புலப்படுகின்றது; இச்செந்தமிழ்நாட்டின்கண் திருவாரூர் தில்லை திருவண்ணாமலை மதுரை திருநெல்வேலி முதலான ஊர்களில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய சிவ பெருமான் கோயில்களைக் காட்டினும் சாலப்பெரிய கோயில்கள் எகுபதி நாட்டில் எத்தனையோ ஆயிர ஆண்டு கட்கு முன்னரே ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந் தமையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/162&oldid=1591493" இலிருந்து மீள்விக்கப்பட்டது