உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் - 28

இஞ்ஞான்று பழுதுபட்டுக் கிடக்கும் அவற்றை இன்றும் நேரே காணும் முகத்தாற் றெளியலாம்; அக் கோயிற் சுவர்களிற் செதுக்கி வைத்திருக்கும் கல்வெட்டுகள் ஒன்றில் இங்ஙனங் குறிக்கப்பட்டிருக்கின்றனது; “உலகிற்கு முதலான கடவுள் விசும்பின்கண் விளங்கும் ஒளியிலே இருக்கின்றார்; அவருடைய அடையாளங்கள் நிலத்திலே இருக்கின்றன; நாடோறும் அவைகளுக்குத்தான் வழிபாடு ஆற்றப் படுகின்றது." எல்லாத் தேவர்களும் பகலவனையே தமக்குத் தலைவனாக வழிபடுகின்றனர்; அவன் உள் பொருள்கள் எல்லாவற்றிலும் தன்னை விளங்கக் காட்டுகின்றான்; மலை யிலிருந்து அருவி வரையில் ஒவ்வொன்றிலும் பெயருடைய வனாயிருக்கின்றான். எல்லாப் பொருள்களிலும் நிலை பெற்றிருப்பது கதிர்க் கடவுளே. இம் முதற்கடவுள் பண்டு தொட்டேயிருக்கின்றான். அவன் எல்லாத் தேவர்கட்கும் பெரியோன் மிகப் பழைய இக் கல்வெட்டினால் எகுபதியர் உலகிற்கு முதல்வனான கடவுளை வானின்கண் விளங்கும் பேரொளிப் பிழம்பான ஞாயிற்று மண்டிலத்தின்கட் கண்டு வழிபட்டு வந்தவரென்பது இனிது விளங்குகின்றதன்றே.

இனி, எகுபதியரைப் போலவே பண்டைக் காலத்தில் நாகரிகத்திற் சிறந்தவராய் வயங்கிய பாபிலோனியர்2 தமது நாட்டின் கட் பற்பல இடங்களினும் திங்களுக்கும் ஞாயிற்றி னுக்கும் கோயில்கள் எழுப்புவித்து அவற்றின் கண் அவை தம்மை வணங்கி வந்தனர். ஊர் என்று பெயர் பெற்ற இடம் திங்களங் கடவுளை வழிப்படுத்துச் சிறந்த நகரமாக அவர்களாற் கொண்டாடப்பட்டு வந்தது.பாபிலோனியர்க்கு அணிமையில் உயிர் வாழ்ந்த சாலடியர் என்னும் மிகப் பழைய நாகரிக மாந்தர் அப்பாபிலோனியரோடொப்பத் திங்களங் கடவுட் கும் பகலவனுக்குந் தவப் பெரிய கோயில்கள் அமைப்பித்து அவை தம்மை வணங்கி வந்ததோடு, தீக்கடவுட்குஞ் சிறந்த கோயில்கள் ஆங்காங்கு கட்டுவித்து அவற்றின்கண் அதற்கு வழிபாடு ஆற்றிவந்தனர்; அங்ஙனம் வழிபடுங்கால் அவர் அக் கடவுட்கு வழுத்துரையாகக் கூறிய மொழிகள் பின் வருமாறு காணப் படுகின்றன; “அவர்களால் வானின்கட் பின்றொடரப் பட்டுத் தலைவனாய் முதற்பிறந்த தீக்கடவுள் தனக்கொரு தந்தையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/163&oldid=1591494" இலிருந்து மீள்விக்கப்பட்டது