உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் - 28

இனி, உலகம் யாங்கணும் இஞ்ஞான்று பரவி விளங்கு கின்ற கிறித்துவ சமயத்தார்க்குச் சிறந்த வேதமாய்ப் பேணப் படுகின்ற பைபிள் என்னும்நூலைக் கொண்டு அச்சமயத் தார்க்கு முன்னோர் கைக்கொண்டிருந்த பழைய கொள்கை களும் ஈண்டொரு சிறிது ஆராய்ந்தறியற் பாலனவாய் இருக்கின்றன.. கிறித்துவ மறையின் முதற் புத்தகத்தில் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுட்கு எலோகிம்” எனும் பெயரே நனி சிறந்ததாய்ச் சாலப் பழையதாய் எடுத்தாளப் பட்டிருக் கின்றது. இப்பெயர் எல என்னுஞ் சொல்லிலிருந்து வந்ததெனக் கிறித்துவ வேத ஆராய்ச்சி வல்ல புலவோர் உரை கூறுகின்றார். அல்லதூஉம், மோசே என்னும் அடிய வர்க்கெதிரே கடவுள் தோன்றி, "யான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோப் புக்கும் எதிரே காட்சி தந்தபோது எல்சடை என்னும் பெயராற் றோன்றினேன்” என்று அருளிச் செய்த சொற்றொடரில் எல் என்னும் பெயரே நன்கு காணக்கிடக்கின்றது. மேலெடுத்துக் காட்டிய பினீசியர் சாலடியர் பாபிலோனியர் கொள்கை வரலாறுகளில் முதற் பெருங்கடவுள் எல் எலியன் என்று வழங்கப்பட்ட பான்மை யினை இனிது விளக்கியிருக்கின்றேம். அவரோடொப்பக் கிறித்துவ சமயத்தார்க்கு முன்னோரும் முதல்வனை எல் என்றும், ஏலோகிம் என்றும், எல்சடை என்றும், ஓரோ விடங்களில் எல் எலியன் என்றும் வழங்கி வந்தமையினை உற்று நோக்குங்கால், அவருங் கடவுளை ஒளிவடிவினன் என்றே கருதி வழிபட்டமை புலனாகா நிற்கும். அதனால் அவர்களும் ஒளியுடைப் பொருள்களான பகலவன் தீ முதலியவற்றின் வாயிலாகவே கடவுளை வழிபட்டு வந்தா ராகல் வேண்டு மென்பது பெறப்படும். இதற்குச் சான்றாகப் பிறிதொன்றுங் காட்டுவாம். ஆபிரகாம் என்னும் அடியவர் மகப்பேறு வேண்டி இறைவனைத் தொழுது அறிதுயிலில் அமர்ந்திருந்த போது அவர்க்கு முன்னே ஆண்டவன் தழல்வடிவாகத் தோன்றினான் என்பதூஉம், மற்றொருகாற் சினை18 என்னும் மலைமுடிமேல் இறைவனது அருண் முகிலானது ஆறுநாள் வரையிற் கவிந்திருந்து ஏழாம் நாளில் தோன்றிய போது றைவனது அவ்வருட்டோற்றக் காட்சி அம்மலைக் குவட்டின்மேல் விழுங்கும் அனல் வடிவாய் இசரவேல் மக்களின் கண்களுக்குப் புலப்படலாயிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/171&oldid=1591502" இலிருந்து மீள்விக்கப்பட்டது