உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

147

என்பதூஉம் கிறித்துவ மறையின் கண் விளக்கமுறச் சொல்லப் பட்டிருத்தலின் இஞ்ஞான்றைக் கிறித்துவ சமயத் தவரின் முன்னோர் முழுமுதற் கடவுளின் றிருவுருவை அனல் வடிவாகவே கண்டு தொழுதனரென்னும் உண்மை மறுக்கப் படாது நாட்டப் படுமென்க. ஈண்டுக் காட்டிய இவ்வர லாற்றில் முதற் பெருங் கடவுட்குச் சிறப்புடைப் பெயராகச் சொல்லப் பட்ட ‘எல்சடை' என்னும் பெயரிற் கண்ட ‘சடை’ என்னுஞ் சொல்லுஞ் சிவபெருமாற்குச் சிறந்த பெயராகத் தமிழ் நாட்டில் வழங்குஞ் ‘சடையன்' என்னுஞ் சொல்லும் ஒன்றாயிருத்தல் பெரிதும் நினைவுகூரற்பால தாகும், மேலும் யாக்கோப்பு என்னும் அடியவர் இறை வனருளை நேரே பெற்று, அவனைத் தொழுகுறியாக ஒரு குவிந்த கல்லினை நிறுத்தி அதன் மேல் எண்ணெயைச் சொரிந்து அதனைப் பீத்தெல்" அல்லது முதல்வன் இருக்கு மிடம் (கோயில்) என்று பெயரிட்டு வழிபாடாற்றி வந்தமை யும், ஆன்20 என்னும் ஊரிலிருந்த பகலவன் கோயிலின்கண் ஆன்கன்றினை (நந்தியை) இசரவேல் மரபினர் வணங்கி வந்தமையும், பலி யீடங்களின் மேற் குன்றாத்தீ வேட்டு வழிபட்டமையும், இசரவேல் மரபினரின் குருமார்கள் ஒளிவடிவின் அடையாளமான குவிந்த மணிக் கற்களை மார்பிற் கட்டிக் கொண்டிருந்தமையும் (சிவலிங்க தாரணம்) ஆராய்ந்து பார்க்கும் நடுநிலையாளரெல்லாம் கிறித்துவ சமயத்தினர் தம் முன்னோர் செய்து போந்த முதற்கடவுள் வழிபாடும் தமிழ் நாட்டினர் செய்து போதருஞ் சிவவழிபாடும் ஒன்றே யாமென்று உணராமற் போவரோ! அது ய நிற்க.

இனி, நாம் உறையும் ஆசியாக் கண்டத்தினும், நமது கண்டத்திற்கு அயலிலுள்ள ஐரோப்பாக் கண்டத்தினுமுள்ள நாகரிக மக்கட்கும் பன்னெடுங் காலமாய்த் தெரியாதிருந்து நானூற்றிருபத்தெட் டாண்டுகளுக்கு முன் கொலம்பசு என்பவராற் கண்டறியப்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் மெக்சிகோ' என்னும் நகரத்திலும் பெரு என்னும் நகரத்திலும் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே நாகரிக வாழ்க்கையிற் சிறந்து வயங்கிய மக்கள் அந்நகரங்களிற் பகலவனையும் திங்களையும் தீக்கடவுளையும் வைத்து

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/172&oldid=1591503" இலிருந்து மீள்விக்கப்பட்டது