உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் 28

அந்நினைவோடொத்ததோர் இனிய வடிவத்தினை யுடைய தாகும், இங்ஙனமே துன்பப்படுபவன் உறுப்புகள் அத் துன்பத்திற்கேற்ற வடிவினைப் பெறுதலும், இன்பத்திற் றிளைப்பவன் உறுப்புகள் அவ்வின்பத்திற்கிசைந்த வடி வினைப் பெறுதலும், கல்வியறிவிற் சிறந்தோன் வடிவம் அக் கல்விக்கு தக்க அமைப்பினை அடைதலும், செல்வத்தின் மிக்கோன் உடம்பு அதற்கேற்ற சீரினைப் பொருந் தலும் தெற்றென விளங்கா நிற்கும். வ்வாறு அகத்து நினைவின் நிகழும் நிகழ்ச்சிக்கிணங்கப் புறத்துப்பொருளின் வடிவு அமைவுறு மாற்றைப் பல்காலும் ஆராய்ந்து காண வல்லார்க்கு உயிரின் அறிவு நினைவுகளுக்கும் உருவம் உண்டென்பதூஉம், அவற்றோடியைந்து நிற்கும் அறிவில் பொருள்களும் அவ் வுருவத் தினையொத்த வடிவினைத் தங்கட்பெறு மென்பதூ உம், உயிர்ப்பொருளும் போலவே உயிரல்லப் பொருளும் வேறு வேறிய்ல்பனவாயிருத்தல் அவற்றின் உருவங்களும் வடிவங்களும் வேறுவேறியல் பினவா மென்பதூஉம் நன்கு விளங்கிக் கிடக்குமென்க.

8

7

இவ்வுண்மையை மேல்புல அறிஞர் ஒருவர் ஆராய்ந்து நிறுவுமாறும் உற்றுநோக்கற்பாற்று. அவ் அறிஞர் தாம் பலகால் முயன்று நுண்ணுணர்வாற் றெரிந்தமைத்த அரியதொரு பொறியினெதிரே ஒருவர் நின்று அதனுள் வைத்த நிழலுருத் தட்டத்தில் தமது கையை மெல்லெனவைத்துக் கருத்தை ஒருவழி நிறுத்தி ஒன்றை நினைக்க அந்நினைக்கப் பட்ட பொருளின் வடிவு உடனே அத்தட்டத்திற் பதிந்து தோன்றியது. இங்ஙனம் எடுக்கப்பட்ட நிழலுருக்கள் பல வற்றை உற்று நோக்கினார். பலரும் அவற்றுட் சில தெளி வின்றிக் கலங்கிக் காணப்பட்ட ன வென்றும், வேறுசில திருத்தமாகவுந் தெளிவாகவும் அமைந்திருந்தன வென்றுங் கூறா நின்றார். இவ்வாறிரு வேறு வகை வகையாய் அவை காணப்படுதற்கு துவென்னை யென்று ஆய்ந்து நோக்கிய வழி, அவற்றை நினைத்த ஒருவர் நினைவு ஒரு காலத் தொன்றில் உறைத்து நில்லாது கலங்கினமையும், மற்றை யொருவர் நினைவு அக்காலத்து அப்பொருளில் உறைத்துத் தெளிவாய் நின்றமையுமே அவ்வாறவை வேறுபட்டுத் தோன்றுதற்கு

ஏது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/193&oldid=1591525" இலிருந்து மீள்விக்கப்பட்டது