உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

முை

169

இடஞ்செய்தன வென்னு முண்மை புலப்பட லாயிற்று. இன்னும், அப்பொறியின் அண்மையிலிருந்து நினைப்பவர் நினைவின் உருவையேயன்றி மிகவுஞ் சேய்த் தாய்ப் பல்லாயிர நாழிகை வழி கடந்த இடங்களிலிருந்து நினைப்பவர் நினைவின் உருவையும் அங்ஙனமே பட மெடுத்துக் காட்டலாம் என்று அம்மேல்புல அறிஞர் உறுதி யுரை கூறுகின்றார். அகத்தே தோன்றும் நினைவின் உருவைப் போல்வது புறத்தேயுள்ள பொருட் கண்ணும் உண்டாம் முறையைத் திட்பமாய்க் கட்புலனெதிரே தேற்றிக் காட்டும் இவ் அறிஞர் ஆராய்ச்சியின் வ் விழுப்பத்தை உணர்ந்தபின் இவ் வுண்மையை ஐயுறுதற்குச் சிறிதும் இடனின் றாம் என்க. எனவே, புறத்தே காணப்படும் அறிவில் பொருள் கட்கு வடிவம் உளதாதல்போலவே, அகத்தே நிகழும் உயிரின் அறிவுக்கும் உருவம் உண்டென்பதூ உம், அவ்வறிவினுருவம் தன்னோடொத்ததொரு வடிவினை அறிவில் பொருட்கண் விளைவிக்கு மென்பதூஉம் இனிது பெறப்படுதல் காண்க.

அற்றேல், அறிவினுருவம் முன்நிகழ்வதெனவும் அறிவில் பொருளின்வடிவம் பின் நிகழ்வதெனவும் உரைத்தல் வேண்டும்; அவ்வாறுரைப்பிற் பிறந்த புனிற்றிளங்குழவி மாட்டும் அறிவுருவம் உண்டென்றுரைத்தல் வேண்டும்; மற்ற அஃது அவ்வுருவம் உடைத்தாகலின்றி முழுதும் அறியாமையாற் கவரப்பட்டுக் கிடத்தலைக் காண்டுமாக லானும், பின்னர் அது நாளேற நாளேற வளர்ந்து புறப் பொருள்வடிவங்களை அறியும் முகத்தால் அறிவு உருவம் பெறலே முறையாகப் போதரலானும் அறிவில் பொருட்கண் உள்ள வடிவமே முதலாதல் தெளியப் படுமாலெனின், நன்று கூறினாய்.. சிற்றுயிர்களின் அறிவு மட்டுமே முதற்கண் அறியாமையான் மறைக்கப்பட்டிருந்து பின்னர் அறிவில் பொருட்சேர்க்கையால் அது நீங்கி அறிவுருவம் பெறு மென்றல் ஒரு முறையான் ஒக்கும்; - மற்று எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளறிவும் அங்ஙனம் புறப்பொருட் சேர்க்கை யால் அறிவுருவம் பெறுமென்றல் ஒவ்வாதாகலின், “முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்பழம்பொரு" ளாம் முதல்வன் அறிவு என்றும் உருவுகொண்டு விளங்கியபடியாயே நிற்கும் என்று ஓர்க. அற்றன்று, இவ்வுலகம் வடிவற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/194&oldid=1591526" இலிருந்து மீள்விக்கப்பட்டது