உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் - 28

L

நிலையிலிருந்து பின்னரொருகால் வடிவுற்றதனை நேரே கண்டார் சிலரேனும் இருப்பினன்றோ, அவ்வடிவினை அதன்கட் பிறப்பித்த பேரறிவாளன் ஒருவன் உண்டென்பது துணியப்படும்; அவ்வாறதனைக் கண்டார் எவருமின்மை யின், உலகம் இஞ்ஞான்றுள்ள படியே என்றும் வடிவுடைத் தாய் இயங்குமென்று உரையாமோ வெனின்; அறியாது கூறினாய், இந்நிலமாவது யாது? மண்ணும் புனலும் அவற்றின் கூறுகளும் ஆகிய உறுப்புக்கள் ஒருங்குதொக்க தொகையே யாகலின், இவ்வுறுப்புக்களின் பெற்றியை ஆராயவே இவ்வுறுப்புகளாற் றிரண்டதிரளையின் பெற்றியுந் தானே புலப்படும். இந் நிலத்தின் கட் காணப்படும் எத்தகைய கட்டுப் பொருளேனும் எத்தகைய நெகிழ்ச்சிப் பொருளேனும் அவையெல்லாம் மிகவெய்ய அனலொடு சேர்ந்தவழித் தம் வடிவுகெட்டு ஐம்பொறிகட்கும் புலனாக மல் மறைந்து போதல் காண்டுமன்றே, அங்ஙனங் கரைந்து மறைந்தவற்றை அறிவுடையானொருவன் ஆக்குமாற றிந்து முயன்றவழி அவைபெயர்த்துந் தம் பழைய வடிவு கூடிப் புலப்படுதலுங் காண்டுமன்றே. இவ்வாறு உறுப்புப்பொருள் களில் நேரே கண்டறியப்படுந் தோற்ற வொடுக்கங்கள், அவ்வுறுப்புகளின் தொகையாகிய இந்நிலவுலகத்துக்கும் உளவாதல் ஆராய்ச்சி வல்ல அறிஞர்க்கெல்லாம் ஒப்பமுடிந்த மையின், இவ்வுலகம் என்றும் வடிவுடைத்தாயே இயங்கு மென்றும், அதற்கு வடிவினைக் கற்பித்த முதல்வனில்லை யென்றுங் கூறும் உரை அடாதென்க. ஆகலான், அது வடி வின்றி நின்றதொரு காலம் உண்டெனவும், அப்போததற்கு வடிவினைக் கூட்டி அதனைத் தோற்றுவித்த ஒரு முதல்வன் உண்டெனவும் துணிக. துணியப்படவே, அறிவில்லாத பொருட்கண் வடிவந் தோன்று தற்கு முன்னரே பேரறிவுப் பொருளாய் அதனை ஊடுருவி நின்ற முதல்வன் அறிவு ருவவிளக்கமுடைத்தாய் நிற்கு மென்பதூஉம் துணியப் படும். இதுகொண்டு இறைவன் உலகங்களைப் படைத்த நோக்க மாவது, பண்டுதொட்டே அறியாமையிற் கட்டுண்டு கிடந்த சிற்றுயிர்களான நம்ம னோர்க்கு அவ்வறியாமையை நீக்கித் தனது அறிவினுருவம் போல்வதனை நம்மறிவினுந் தோற்று வித்தல் வேண்டி, அங்ஙனஞ்செய்வது நேரே இசையாமையின் அது செய்தற்கு இசைந்த இடைப்பட்ட தொரு கருவியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/195&oldid=1591527" இலிருந்து மீள்விக்கப்பட்டது