உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

171

மாயையை இயக்கி, அதன்கண் அவ்வுருவி னோடொத்த வடிவினைப் புலப்படுத்தி, அவ்வடிவினை அறியுமாற்றான் நம்மனோர் அறிவுக்கும் அதனையொப்ப தோர் உருவு கிளர, அம்முறையால் நாம் இறைவனாகிய தன்னை ஒருபுடை யொத்து இன்புற்றிருத்த லேயாம் என்பது தெளியப்படும். இவ்வியல்பினை ஓர் உவமை யினும் வைத்து விளக்குவாம். ஓவியம் வரைதலிற் கைதேர்ந்தான் ஒரு நுண்ணறிவினன் தன் அறிவின்கட் பல காலும் முயன்று முயன்று விளக்கிய ஓர் அரும் பெறருலுருவினை யொப்ப தொன்று புறத்தே ஒரு நூற் படாத்தினும் புலப்படுதல்வேண்டிப் பலவகை நிறங்களால் அதனைக் குழைத்தெழுதிவைப்ப, அவ்வோவியம் வல்லானைப் போல் தானுந் தேர்ச்சிபெற விழையும் ஏனையொருவன் அவ்வோவியத்தின்கண் எழில் கனிந்து துலங்கும் அவ்வடிவ அமைப்பின் நுண்ணிய கூறுபாடு களையும் நிறங்களின் விளக்கத்தையும் அந்நிறங்கள் ஒள்றோ டொன்று கலந்து இழைந்துருவாமாற்றினையும் பன்னாளும் பன் முறையுங் கூர்ந்துணர்ந்து கற்றுப், பின்னர் அதனை யொப்ப தோர் உருவினைத் தன்னறிவினும் விளங்கக் கண்டு அவ்வோவியம் வல்லானை ஒருபுடை ஒப்பனாவ னென்பது, இங்ஙனமே சிற்றுயிர்களும் மாயையிற் றீட்டப்பட்ட

றைவனது

அறிவுருவப் போலியைக் கண்டு தாமும் அவ்வறி ருவப் பேறு உடையராய் வயங்குவரென்க. என்று இங்ஙனம் ஆராய்ந்து காண்புழி, மாயையில் வடிவுதோன்றுதற்கு முற் கொண்டே இறை வனறிவின்கண் அதற்கு முதலாகிய உருவம் அமைந்து கிடக்குமென்பது நன்கு பெறப்படும். அதுகிடக்க.

அற்றாயின், மாயையின் வடிவுக்கு முதலாய் அதனை யொப்பதோர் உருவே இறைவனறிவின்கண் உளதாயின், மாயையின் மேற்பட்ட தன்மை அவனறிவின்கண் இல்லை யென்று கொள்ளப்படுமாலெனின், அது பொருந்தாது, அவன் மாயையினும் ஏனை யுயிர்களினும் மேற்பட்ட அளவிலா வியத்தகும் இயல்புகள் உடையனாகலின். மாயை அவனியல்பு கட்கு இயையுமாறெல்லாம் நிற்க வல்லதன்று; அது தன் அளவிற்கு ஏற்றபெற்றியே அவன்றன், அறிவுருத்தி னோடு ஒப்பதொரு வடிவினைப் பெறாநிற்கும். மாயையிற் புலனாம் வடிவுகளைக் கொண்டன்றி அவன்றன் அளக்க லாகாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/196&oldid=1591528" இலிருந்து மீள்விக்கப்பட்டது