உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் - 28

தன்மைகளை நேரே கண்டுணரும் பேராற்றல் நம்ம னோர்க் கின்மையின், நஞ்சிற்றறிவு கொண்டு இறைவனது அறிவின் பரப்பு முழுதும் அளந்து முடிவு கட்டப் புகுதல் பெரியதோர் இழுக்காய் முடியும். ஆகையால், மாயையின் வழியறிந்த அவனியல்பு அவ்வறிவளவின் அடங்காது மேலு மேலும் விரிந்து செல்லுமென்று கடைப்பிடிக்க. அல்லா மலும், மாயையின் வாயிலால் உணரற் பாலனவாய் அவன்றன் இயல்புகளே இன்னும் எத்துணையோ கோடிகளாய் பல்கிக் கிடக்க. அவற்றுள் ஒரு சிறு தினையளவுதானும் ஆய்ந்தறிய மாட்டாத நம்மனோர் அம்மாயையினும் மேற்கடந்து செல்லும் அவன்றன் அறிவின் பரப்பினை ஆராயப் புகுதல் சிறுமகார் தஞ் சிறு காலாற் பெருங்கடலின் ஆழத்தையும் தஞ்சிறுகையால் அதன் பரப்பினையும் அளந்தறியப் புகுதலையே ஒக்கும். புற்பூண்டு மரஞ்செடி கொடிகளில் எத் துணையோ ஆயிரக் கணக்கான அமைப்பின் வகைகள் இருக் கின்றன. அவை யெல்லாம் நன்காராய்ந்து அவ்வமைப்பு களினால் அறிவுறுக் கப்படும் இறைவனறிவின் றிறத்தை அறிந்தனமா? ஈரறிவு முதல் ஐயறிவுகாறுமுள்ள புழுக்கள் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் முதலியவற்றில் எத்துணை யோ எத்துணையோ வகையான அமைப்பு வேறுபாடுகள் உள்ளன, அவையெல்லாம் முழு தாராய்ந்து அவற்றின் கண்ணெல்லாம் விளங்கித் தோன்றும் ஐயனறிவின் பெற்றி யைத் தெளிந்துணர்ந்தனமா? இவற்றி னல்லாஞ் சிறந்த மக்கள் உடம்பின் அமைப்புகளினுங் கணக்கிறந்த வேறு பாடுகள் காணப்படுகின்றன; அவை யெல்லாம் ஒருங்கே ருங்கே தெரிந்து அவனறிவின் ஆற்றலைக் கண்டனமா? இனி இவை யொழிய, இந்நிலத்தின் உள்ளும், நிலத்தின் மேல் நம்மைச் சூழ்ந்துள்ள நீரினும் காற்றினும், இடைவெளியினும் நம்பொறிகளுக்குப் புலனாகாமல் அமைந்து கிடக்கும் பல்வகைப்பொருள்களின் கூறுபாடுகளெல்லாம் ஆராய்ந்து அவனறிவை வியந்தனமா? இனி நந்தலைக்குமேல் வானின் கட் காணப்படும் வான்மீன்கள் கோள்கள் முதலிய வற்றின் இயல்புகளையும் ஆண்டவற்றின்கண் உள்ள அமைப்பு களையும் தேர்ந்து அவனறிவினாற்றலை எள்ளளவேனும் உணர்ந்து மகிழ்ந்தனமா? சிறிதும் இல்லையன்றே. இங்ஙனம் மாயையின் பரப்பும், அதன்கண் அமைந்த பலகோடி பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/197&oldid=1591529" இலிருந்து மீள்விக்கப்பட்டது