உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

173

களின் இயல்புகளும் அமைப்புகளுமே நம்மனோர் அறிவான் அளந்தறிதற்கு இயலாதனவாக, நந்தஞ் சிற்றறிவு கொண்டு இறைவனறிவை அளக்கப் புகுதல் எத்துணைப் பேதைமை யாம்! அதனால், மாயையின் மேற்பட்ட தன்மை அவனறிவின் கண் ல்லையென்றல் ஒருவாற்றானும் இயையாதென மறுக்க.

இனி, மாயையிற் காணப்படும் எல்லா வடிவங்கட்கும் முதலாய் அவற்றோடொருபுடை யொப்பனவாய உருவங் கள் றைவனறிவின்கண் உண்டென்பது மேலே காட்டப் பட்ட மையின், உயிர்களின் உடம்புகட்கு முதலாம் உருவும் இறைவனறிவின்கண் முற்கொண்டமைந்து கிடக்குமென் பதும் சால்லாமலே விளங்கும். இவ்வுலகத்துயிர் களின் உடம்புகளையெல்லாம் பகுத்துப் பார்ப்புழி அவை ஆண் பெண் என்னும் இருகூற்றிலே சென்று அடங்குதலும் மேலே காட்டப் பட்டது. ஆகவே, இவ்வாண் பெண் வடிவுகட்கு முதலான ஆண் பெண்ணுருவுகள் முதல்வனறிவின் கண்ணும் முதல்வியறிவின் கண்ணும் முற்கொண்டேயுளவாதல் தெற்றெனப் பெறப்படும். பெறப்படவே, இறைவன் ஆணுருவிற் கொத்த இயல்பின னாயும், இறைவி பெண்ணுரு விற் கொத்த இயல்பினளாயும் அறிவுருவில் நிற்பரென்ப தூஉம் தானே போதரும் என்க.

ரு

அற்றேலஃதாக, இறைவன் ஒருபொருளாயும் இறைவி அப்பொருட்டன்மையாயும் நிற்பரென நூல்கள் கூறாநிற்க, ஈண்டு அவ்விருவரையும் இரு முதற் பொருள்போல் வைத்துக் கூறுதல் என்னையெனின்; ஓருயிரே ஆண்டன்மை பெண் டன்மை இரண்டும் ஒருங்கு உடையவாதல் யாண்டுங் காணப் படாமையானும், இறைவி இறைவனை வழிபட்டாளெனவும் இறைவன் இறைவியை மணந்தானெனவும் அவர் தம்மைத் தனித்தனி இருமுதற் பொருள்களாக வைத்துரைக் கும் பழைய வரலாறுகளெல்லாம், அவரிருவரையும் பொரு ளும் அதன் பண்புமாமெனக் கொள்வுழிப் பொருளிலவாய்ப் பொய்படு மாதலானும், எண்ணிறந்த உயிர்கட்கு எண்ணி றந்த உடம்புகள் படைக்கப்படும் அவ்வப் பொழுதே அவற் றுட் பலப்பல சிதைக்கப்படுதலை உற்று நோக்கும்வழி அவற் றைப் படைக்கும் வினைமுதலேயுடனே அவற்றுட் பல வற்றை அழித்தல் செல்லாமையின் ஒன்றாற்படைக்கப்பட்ட வற்றை மற்றொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/198&oldid=1591530" இலிருந்து மீள்விக்கப்பட்டது