உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மறைமலையம் 28

பொருத்தமாத லானும்,

அழிக்குமெனலே உலகத்துக் காணப்படும் உடம்பின் றோற்ற மெல்லாம் பெண்ணுடம் பினின்றே போதரக்காண்டலானும் படைத்தற்றொழிலை நிகழ்த்தும் இறைவியும் அழித்தற் றொழிலை நிகழ்த்தும் இறைவனும் வெவ்வேறு வினை முதல்களே யாகுமல்லாமல் அவர் பண்பும் பண்பியுமாதல் ஏலாதென விடுக்க. அங்ஙனம் அவர் தனித்தனி வினைமுதல் களேயாயினும் இறைவன் மேல்விரிந்த நிறைவாயும் இறைவி அவனுள் அடங்கி விரிந்த நிறைவாயும் ஒன்றெனப் படுதற்கும் இரண்டெனப் படுதற்கும் ஆகாமல் ஒருவரோடொருவர் நனிவிரவிப் பண்பும் பண்பியும் போற் பகுக்கப்படாது என்றும் ஒருமையுற்று நிற்றல் பற்றி அவர் தம்மைப் பண்பும் பண்பியுமென்று நூல்கள் கூறியதல்லது அவர் உண்மையிலே அவ்வியல்பினராவ ரென்பது அவை தமக்குக் கருத்தன்றாம் என்க.

அற்றேல், இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிற்கும் உரியனாகவைத்து நூல்கள் துமாறென்னையெனின், அழித்தற் றொழிலினும் மிக்க வலியுடையது பிறிதொன்று இல்லாமையானும் அவ் வழித்தற்றொழிலைச் செய்யும் முதல்வன் அதனை ஒரோ வழிச் செய்யாது விட்டுவைப்பினல்லது படைத்தல் காத்தல் என்னுந் தொழில்கள் நடைபெறமாட்டாமையானும். அதனால் இறைவன் ஆணைவழி நின்றே இறைவி படைத்தல் காத்தல் களைச் செய்வளென்பது போதரலானும் இறை வனே முத் தொழிற்குங் காரணனாமென்று உணர்ந்து கொள்க. அவ்வாறு ரைப்பின் இறைவியை ஏவிப் படைத்தல் காத்தல்களைச் செய்யும் அம்மட்டேயல்லது இறைவன் தானே அவற்றைச் செய்ய மாட்டுவான் அல்லன் போலு மென ஐயுறக்கிடக்கு மாலெனின், எவற்றினும் மிக்கதாகிய ஓர் அருந்தொழிலைச் செய்ய வல்லா னொருவன் அதனிற் றாழ்ந்தனவாய ஏனைத் தொழில்களை ஏனையோரைக் கொண்டு முடித்தல் பற்றி அவன் அவற்றைச் செய்யமாட்டு வானல்லனென்றல் பொருந்தாது; என்னை? செங்கோ லோச்சும் ஆற்றலும் அறிவும் உடை யானோர் அரசன் தானே செய்தற்குரிய சில வினை களைத் தனக்கென வரைந்து வைத்து, அவற்றினுந் தாழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/199&oldid=1591531" இலிருந்து மீள்விக்கப்பட்டது